அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1984 –  AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –11

  • December 31, 2025
  • 3 Comments

புதிய ஆட்சி 1980 ல் 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்து ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் வெற்றி வெற்றிப்பூரிப்புடன் அரசை நிர்வகிக்க துவங்கினார். அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்க முடியாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறியிருந்தது. சட்டம் – ஒழுங்கு   நக்சல்பாரிகளின் வன்முறைகளால் தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் தொடர்கதையானது. திருப்பத்தூரில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் போலீஸ் ஜீப்பில் பயணித்த காவல்துறையினர் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். இந்த […]

அரசியல் ஆசிரியரின் பார்வை

2025 டிசம்பர் திக் திக்

  • December 5, 2025
  • 0 Comments

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று திரு விஜய் அவர்களை அவருடைய பட்டினப் பாக்கம் இல்லத்தில் சந்தித்தார். இரண்டு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின்றது. இதற்கு முன் ஐந்து பேர்  கொண்ட குழு தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக காங்கிரஸ் கட்சியின்  மேலிடம் அமைத்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று 05/12/2025 விஜய் அவர்களை ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த […]

அரசியல் அரசியல் துணுக்கு

1962 ல் அண்ணாவின் வெற்றித் துவக்கம்.

  • December 3, 2025
  • 0 Comments

1962 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற திருச்செங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோட கவுண்டரும் திமுக சார்பில் சே கந்தப்பனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசியலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, மா. பொ. சி. தமிழரசுக் கழகம், ஜன சங்கம், தமிழ் தேசிய கட்சி, சோசியலிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக இருந்தனர். திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டும் ஆதரித்தது. பணபலம் படைபலம் அமைச்சர்களின் தீவிரப் பிரச்சாரம் எல்லாம் காங்கிரசுக்கு இருந்தது திமுக வேட்பாளருக்கு திமுகவின் இரண்டாம் கட்ட […]

அரசியல் ஆசிரியரின் பார்வை

செங்கோட்டையன் “தவெக”வில் இணைந்தது சரியா…? தவறா…?

  • December 2, 2025
  • 0 Comments

50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பயணித்த திரு செங்கோட்டையன் இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெகவில் இணைந்திருப்பது எல்லோருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. காரணம் 55 வருடங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதாவை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டவர். அதுவும் ஒரே கட்சியில் தொடர்ந்து  நேற்று வரை பயணித்தவர். இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜய் என்ற நடிகரின் கட்சியில் இணைந்திருப்பது தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியக்குறியாக மாறியிருக்கிறது. விஜய் காஞ்சிபுரம் மேடையில் சொன்னது போல் தவெக ஒரு ஆச்சரியக்குறியாக இருக்கும் […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1980 – (After the dissolution of the MGR Regime) ADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –10

  • November 23, 2025
  • 0 Comments

This article is available in audio format here : 1980 இல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர்க்கு மிகவும் மூளையாகவும் அனுசரணையாகவும் இருந்த தளபதிகளில் ஒருவரான நாஞ்சில் மனோகரன் கட்சியில் இருந்து விலகும் முடிவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசியல் கட்சியில் முக்கியமான பிரச்சனையே நம்பகத்தன்மை இல்லாதது தான். எந்த நேரத்தில் யார் நம்மை கைவிடுவார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. அரசியல் கட்சியை வழி நடத்துவது ஒரு தலைவருக்கு மிகவும் சிக்கலான விடயம். […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1980 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –9

  • November 4, 2025
  • 0 Comments

PLEASE CLICK THE AUDIO FORMAT நடிகராக இருந்த எம்ஜிஆர் 30 ஜூன்  1977 ல் ராஜாஜி மண்டபத்தில் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்று கொண்டார். எம்ஜிஆர் ஒரு கூத்தாடி, நடிகர், திறமை இல்லாதவர் என்ற கட்டமைப்புகளையெல்லாம் தகர்த்தெறிந்தார். ஒரு இந்திய குடிமகனாக உள்ள எவரும் இந்நாட்டில் தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்று நிரூபணம் ஆன நாள்தான் எம்ஜியார் முதல்வராக பதவியேற்ற நாள். திரு.கருணாநிதியிடம் அவர் விரும்பி கேட்ட சுகாதாரத் துறை கிடைக்காமல் போனதால் வைராக்கியமாக […]

அரசியல் தலைவர்கள்

ஹாப்பி பர்த்டே காந்தி மஹான்- 02-10-2025

  • October 2, 2025
  • 0 Comments

ராஜ்கோட்டின் திவான் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில், காந்தி இளையவர். அவர் சிறுவயதிலேயே ஜைன மதம், இந்து புராணக் கதைகள், புனித நூல்கள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டார். ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளியில் படித்து, 1887-இல் மேட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கணிதம், நல்லெண்ணம், நேர்மை ஆகிய பாடங்களில் சற்று ஆர்வம் இருந்தாலும், மற்ற பாடங்களில் சாதாரண நிலைதான். பாவ்நகர் சமால்தாஸ் கல்லூரியில் படிக்கத் தொடங்கினார், தனது சுயசரிதையிலேயே, “நான் மிகச் சிறந்த மாணவரல்ல, என்று […]

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி ! வேற மாறி! வரலாற்றுத் தொடர் – பகுதி. 5

  • September 26, 2025
  • 0 Comments

முருகனோட கதைய சொல்லி முடித்த பிறகு கபிலர வேள்பாரிய சந்திக்க  கூட்டிட்டு போறாங்க. வழியில அவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்குது. காடுகளை பத்தி, பறவைகளை பத்தி கத்துக்க இவ்ளோ விஷயங்கள் இருக்குதா அப்படின்ற மாதிரி ரொம்ப வியப்புலா இருந்தாரு. அவரு தன்னை ஒரு ஸ்டூடென்ட் அளவுக்கு நினைக்கத் தொடங்கினார். கொற்றவைக் கூத்த பாக்குறதுக்கு பறம்பு மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சாங்க. கபிலர்  நீலன பார்த்து  ஏன் மக்கள் எல்லாம் இவ்வளவு கூட்டம் கூட்டமா வந்துட்டு […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1977- DMK Vs ADMK – அரசியல் கட்டுரை – பகுதி – 8

  • September 24, 2025
  • 1 Comment

1971இல் திமுக மிகப்பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய போது அண்ணாவை மிஞ்சிய கருணாநிதி என்ற கோஷம் விண்ணை பிளந்தது. அப்போது காஷ்மீரில் இருந்து ஒரு டெலிபோன் திரு. கருணாநிதிக்கு வர, மறுமுனையில் ஹலோ நான் எம்ஜிஆர் பேசுறேன். தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றதும் கருணாநிதி நன்றி நண்பா என்று ஆனந்தமடைந்தார். அப்போது எம் ஜி ஆர் இதயவீணை படப்பிடிப்பில் காஷ்மீரில் இருந்தார். 1971 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் பம்பரமாய் சுழன்று திமுகவிற்காக உழைத்தார். பெட்டி பெட்டியாக பணத்தை வாரி […]

கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 7

  • September 19, 2025
  • 1 Comment

கார்த்திக் பேனாவை எடுத்து என்ன  எழுதுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். சுற்றும் மற்றும் பார்த்த பிறகு பேப்பரில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தவன், ஒன்றும் யோசனைக்கு வராமல் கிருக்கலாக கோடுகளை போடுகிறான். பேனா நன்றாக எழுதுகிறது என்று தெரிந்த பிறகு தன்னுடைய பெயரை எழுத வேண்டும் என்று நினைக்கிறான். கார்த்திக் என்று எழுத துவங்கும் பொழுது வீட்டுக்கு வெளியே இருந்து அவனுடைய ஆயாவின் குரல் கேட்கிறது. டேய் கார்த்தி சீக்ரம் வெளில வாடா? ஏன் […]