அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1962 – INC Vs DMK -அரசியல் கட்டுரை-பகுதி-5

  • August 20, 2025
  • 1 Comment

அரசியல் கட்டுரை – 1957-இல் காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற பிறகு தன்னுடைய அமைச்சரவையில் பழைய அமைச்சர்களையே சேர்த்துக் கொண்டாலும் புதியதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கக்கன் அவர்களையும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்தம்மாளையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்தார். நான் மேற்கூறிய வரிகளில் கக்கன் அவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டேன். அவரை இன்ன சமுதாயம் என்று குறிப்பிட்டு முத்திரை குத்துவது ஏற்புடையதான கருத்தாக என்றைக்குமே எனக்கு இருந்ததில்லை. சாதி மத […]

கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 4

  • August 19, 2025
  • 3 Comments

காரில் அமர்ந்திருந்த மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கேசன் காரை ஓட்ட அவன் அருகில் லட்சுமி  அமர்ந்திருந்தாள். ரவிக்குமார் பின் சீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் ஏகப்பட்ட எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தது. அது என்ன என்று  மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் இந்தப் பயணம் ஒரு இறுக்கமான சூழலாகத்தான் இருந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ரவிக்குமார் யோசனை முற்றி நகத்தை கடித்து, கடித்து காரிலேயே துப்பிக் கொண்டிருந்தான். லட்சுமி திரும்பும் போது எதேச்சையாக  பார்த்து விட்டாள். […]

அரசியல் தலைவர்கள்

ஆங்கிலேயரை அலற வைத்த சம்பவக்காரி

  • August 15, 2025
  • 1 Comment

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை – அஞ்சலை அம்மாள் கடலூருக்கு நிறைய சிறப்புகள் உண்டு. சமணர்களின் தலைமையிடமாக ஐந்தாம் நூற்றாண்டில் கடலூர் பாடலிபுத்திரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கடலூரை சென்னை மாகாணத்தின் தலைமை இடமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். கடலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்த முத்துமணி அம்மாகண்ணுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர்தான் அஞ்சலை அம்மாள். குதிரைகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்து வரும் முத்துமணி  பிரிட்டிஷாரின் குதிரைகளுக்கு லாடம் கட்டுவதால் அவருக்கு ஆங்கிலம் பேசக்கூடிய […]

சினிமா சினிமா விமர்சனம்

கூலி – சினிமா விமர்சனம்

  • August 15, 2025
  • 0 Comments

கூலி திரைப்படத்தின் விமர்சனத்தை எங்கருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியல அந்த அளவுக்கு மண்ட ஃபுல்லா கொத்திவிட்டு வெளியில அனுப்புறாங்க. இருந்தாலும் இந்தப் படத்தில் என்ன கதை இருக்குதுனு  படம் முடிஞ்ச பிறகு தேடிக்கிட்டே இருந்தாலும்  கடைசி வரைக்கும் கிடைக்கல. செத்து போன நண்பன் சத்யராஜ்காக பல பேரை கொல்றாரு ரஜினி. அந்த நண்பன் எப்படிப்பட்ட நண்பன். ரெண்டு பேத்துக்குள்ள நட்பு எப்படிபட்டது அப்படின்னு எந்த டீடெயில்டுமே இல்ல. ஆனா படம் ஃபுல்லா ரஜினி நூத்துக்கணக்கான பேர கத்தியாலையும், அருவாள்லயும், […]

கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 3

  • August 13, 2025
  • 1 Comment

திரில்லர் தொடர் – பெங்களூரில் ஆக்சிடென்டில் இறந்து போன ரமேஷ் அச்சு அசலாக பஞ்சாபகேசனை உரித்து  வைத்தது போல் இருப்பான். பஞ்சாபகேசனுக்கு உடன்பிறந்தோர் யாரும் இல்லை. ரமேஷ் அவனின் சின்னம்மா மகன். இருவரையும் பார்ப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று தான் நம்புவார்கள். இருவருக்கும் முகச்சாடை ஒன்றாக இருந்தாலும் ரமேஷ் தாடி மீசையுடன் இருப்பான். பஞ்சாபகேசன் மீசை தாடி இல்லாமல் இருப்பான். தில்லுமுல்லு படத்தில் மீசை இருந்தால் சந்திரன் மீசை இல்லனா இந்திரன் என்று வருமே அந்த  வித்தியாசம் […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY- 1957 INC Vs CPI-அரசியல் கட்டுரை – பகுதி. 4

  • August 12, 2025
  • 2 Comments

அரசியல் கட்டுரை – 1952 இல் மைனாரிட்டி கவர்மெண்ட் அமைத்த  காங்கிரஸ் கட்சிக்கு  ஓய்வில் இருந்த ராஜாஜியை கொண்டு வந்து முதல்வர் பதவியில் அமர வைத்தார் காமராஜர். காமராஜருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ராஜாஜியை முதலமைச்சர் ஆக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து இருந்தார். சில நிபந்தனைகளுடன் முதலமைச்சராக ஒப்புக்கொண்டார் ராஜாஜி. காரணம் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் திரும்பவும் மாநிலத்திற்கு  இறங்கி வருவது சற்று குறைவானதாக கருதப்பட்டாலும்  சூழ்நிலை கருதி […]

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி….!வேற மாறி…..! Episode:2

  • August 9, 2025
  • 2 Comments

வரலாற்று நாவலின் கதை இந்த எபிசோடிலிருந்து வாசகர்களாகிய உங்களிடம் நேரில் உரையாடுவது போல இந்த கதையை சொல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது அதன்படி இந்த வரலாற்று நாவலை ஒரு உரையாடலாக உங்களுக்கு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். வாருங்கள் நம் நவயுக நாயகன் வேள்பாரியை சந்திப்போம்.Episode : 2வேட்டுவன் பாறைன்ற இடத்துலருந்துதான்  பாரியோட  பறம்பு நாட்டுக்கு போக முடியும். முன்னாடி ரெண்டு குன்றுகள் இருக்கு. அதுக்கு பின்னாடி மலைத்தொடர்களாக இருக்கு.  அந்த மலைத்தொடருக்கு மேல […]

கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 2

  • August 7, 2025
  • 1 Comment

End of Episode 1 : ஒரு வாரத்திற்கு முன் தன்னை ஓவியமாக வரைந்து தருமாறு பஞ்சாபகேஷன் ரவிக்குமாரிடம் சொல்ல, அவனை தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறான். அந்தப் படத்தை பார்த்தவுடன் அவனுக்கு பேரதிர்ச்சி ஆகிறது. ஐயையோ தவறு செய்து விட்டோமே என் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் அவன் வரைந்த ஓவியங்களை பொறுக்கிக் கொண்டு தலை தெரிக்க பஞ்சாபகேசன் வீட்டை நோக்கி ஓடுகிறான். EPISODE 2 : பஞ்சாபகேசனுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1952 – INC Vs CPI – அரசியல் கட்டுரை – பகுதி-3

  • August 5, 2025
  • 0 Comments

அரசியல் கட்டுரை – 1952 சென்னை மாகாண தேர்தல் முடிவுகள் காமராஜரை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் 188. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற இடங்களோ 152. இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜருக்கு மிகப் பெரிய நெருக்கடியாக மாறியது. மெஜாரிட்டி பெறாததால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க,  கம்யூனிஸ்ட் கட்சி  62 இடங்களை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் நின்று கொண்டிருந்தது. முத்துராமலிங்க தேவரின் ஃபார்வேர்டு பிளாக் கட்சி 22 இடங்களையும்  […]

கதைகள் தொடர்

பேனா – The Pen – திரில்லர் தொடர்

  • August 3, 2025
  • 0 Comments

திரில்லர் தொடர்- ஓவியம் என்றால்  நமக்கெல்லாம் சற்றென்று ஞாபகத்துக்கு வருவது மோனலிசா என்ற ஓவியம் தான். அந்த மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் யார் என்று கேட்டால் நிறைய பேர் லியானார்டோ டாவின்சி என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அதே போல இன்னொரு புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ அவரைப் பற்றி நிறைய பேர் உலகம் முழுவதும்  தெரிந்து வைத்திருப்பார்கள். 1500 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டாவின்சியையும் 1900 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோவையும். மக்கள் கொண்டாடி தீர்த்தார்கள். […]