கூலி – சினிமா விமர்சனம்


கூலி திரைப்படத்தின் விமர்சனத்தை எங்கருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியல அந்த அளவுக்கு மண்ட ஃபுல்லா கொத்திவிட்டு வெளியில அனுப்புறாங்க. இருந்தாலும் இந்தப் படத்தில் என்ன கதை இருக்குதுனு படம் முடிஞ்ச பிறகு தேடிக்கிட்டே இருந்தாலும் கடைசி வரைக்கும் கிடைக்கல.

செத்து போன நண்பன் சத்யராஜ்காக பல பேரை கொல்றாரு ரஜினி. அந்த நண்பன் எப்படிப்பட்ட நண்பன். ரெண்டு பேத்துக்குள்ள நட்பு எப்படிபட்டது அப்படின்னு எந்த டீடெயில்டுமே இல்ல. ஆனா படம் ஃபுல்லா ரஜினி நூத்துக்கணக்கான பேர கத்தியாலையும், அருவாள்லயும், கடப்பாறயிலயும் கொன்னுக்கிட்டே இருக்காரு. ஆனா அடியாட்கள் திரும்பத் திரும்ப வந்துகிட்டே இருக்காங்க. இப்படி ரஜினி பல சம்பவங்கள செய்றாரு நமக்கு தான் அதுக்கான விடையே தெரியல. ஒரு கேரக்டர் கூட சரியா டிசைன் பண்ணவே இல்ல லோகேஷ். எல்லாமே முன்னுக்கு பின் முரணாவே இருக்குது. லோகேஷோட LCU அப்படின்னு பெரிய பில்டப் கொடுத்து அவரை ஏத்திவுட்டு காலி பண்ணிட்டாங்க. அது நல்லா தெரியுது

தன்னை காட்பாதர் எடுத்த Francis Ford Coppolaனு நினைச்சுக்கிட்டார் போல, என்னதான் இவர் கேங்ஸ்டர் படம் எடுத்தாலும் அது ஒரு படம் இரண்டு படத்துக்கு மேல இவர்ட்ட சரக்கு இல்லைன்றது நல்ல தெரிஞ்சிருச்சு. பழைய பாடல்களை எடுத்து சண்டை காட்சிகளை புகுத்தி மொனன்டனஸ்ஸா ஒரே வேலய செய்றாரு. அது ரொம்ப இரிட்டேஷனா இருக்கு. ரஜினி வயசானாலும் இன்னும் அதே ஆக்க்ஷன் ஹீரோவா எனர்ஜியோட இருக்காரு வாழ்த்துக்கள். ரஜினியோட நடிப்பு இதுக்கு முன்னாடி வந்த ஜெயிலர் படத்தோட நடிப்பு மாதிரி தான் இருக்குது. இந்த படத்துக்கு ஜெயிலர் படம் நூறு மடங்கு பெட்டர்ன்னு சொல்லலாம். அந்த படத்தில புரியிற மாதிரியா ஒரு கிளீனான கதையாவது இருந்துச்சு.

அமீர்கான லோகேஷ் இவ்வளவு கேவலப்படுத்துவார்னு நெனச்சே பாக்கல ஹெலிகாப்டரில் வந்து பீடி வாங்கிட்டு போற அளவுக்கு அவர் கேரக்டர் டம்மி பண்ணி வச்சிருக்காரு. இதுல அமீர்கான் நான் என் வாழ்க்கையிலே கதை கேட்காம நடிச்ச ஒரே படம் இந்த படம்னு சொல்றாரு. உங்க கேரக்டரா கேட்டுருந்தீங்கன்னா காரித் துப்பியிருப்பீங்க.

அடி வாங்குறதுக்குனே அளவெடுத்து தெச்ச மாதிரி சுருதிஹாசனோட கேரக்டர் டிசைன் பண்ணி இருக்காரு டைரக்டர். ஸ்ருதிஹாசன அழவைக்கவும், அடி வாங்கவும் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். அழுவுற சீன்ல்லாம் சுருதிஹாசன் ரொம்ப பிரமாதமா பண்ணி இருக்காங்க பாராட்டுக்கள்.

கன்னட நடிகர் உபேந்திரா சுத்தம். அடியாள் ரேஞ்சுக்கு அவரை டீல் பண்ணி வச்சிருக்காங்க. இதுல மெயின் வில்லன் யாருன்னு தெரியல, மலையாள நடிகர் ஷோபின் மெயின் வில்லனா? நாகர்ஜுனா மெயின் வில்லனா? அப்படின்னு தெரியல சோபினதான் கொடூரமா டைரக்டர் காட்டிருக்காரு.

நாகார்ஜுனாவை பார்த்த பயமே வரல. மியூசிக் பெருசா சொல்ல முடியல. மோனிகா பாட்டு எதுக்குன்னே தெரியல. மோனிகா பெலுசியா அசிங்கப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்டீங்க அத நிறைவேத்திட்டிங்க.

பூஜா ஹெக்டேவ விட ஆக்ரோஷமா டான்ஸ் ஆடறாரு ஷோபின். வாங்குண காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால அப்படிங்கற மாதிரி தான் இருக்குது சோபினுடைய டான்ஸ்.அனிருத்தோட அதே அரத பழசான BGM. அதே வாய்ஸ். டயலாக் ஒரு சீன்லயாவது மனசுல பாதிக்கிற மாதிரி இருக்கா, அதுவும் இல்ல படம் ஃபுல்லா சண்டை போட்டுட்டே இருக்காங்க எந்த சண்டையும் மனசுல நிக்கல. எல்லாமே ஒரே மாதிரி இருக்கு.

டைரக்டர்ஸ் ஒரு படம் இரண்டு படம் சக்சஸ் கொடுத்தா உடனே கண்ண மூடிகிட்டு ஆர்டிஸ்ட்ங்க இவங்க பின்னாடி போயி விழுறாங்க. இது இன்னைக்கு நேத்து இல்ல என்னைக்குமே நடக்கிறதான். நாளைக்கும் நடக்கத்தான் போகுது. மத்தபடி இந்த படத்துல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. இதுக்கு மேல படத்தை போய் பாக்கிறவங்க போய் பாருங்க, காச தண்டம் பண்ணுங்க. அது உங்களோட விருப்பம்
நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்