சினிமா சினிமா விமர்சனம்

மதராசி – MADHARASI – MOVIE REVIEW

படத்தோட ஓப்பனிங் சீன்ல ஒரு கும்பல் தமிழ்நாட்டுக்குள்ளாரா ஆறு கண்டெய்னர்ல துப்பாக்கிய சட்ட விரோதமா கடத்தி வராங்க. இந்த விஷயம் NIA வுக்கு  தெரிஞ்சதும் அந்த கண்டைனர சீஸ் பண்ண ஒரு அதிரடி டீமோட கெளம்புறாரு NIA HEAD பிஜு மேனன். அவரோட சன் விக்ராந்தும் அந்த டீம்ல இருக்காரு. அந்த துப்பாக்கி  கன்டெய்னர் கடத்தல் டீம்ல மெயின் வில்லன் விஜயோட துப்பாக்கி படத்துல வர்ற வித்யூட் இந்தப் படத்துலயும் மெயின் வில்லனா நடிச்சிருக்காரு. அவரோட க்ளோஸ் பிரண்டா இன்னொரு  வில்லனா சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ் நடிச்சிருக்காரு.

ரெண்டு பேரும் NIA ஆளுங்கள அடிச்சி, சுட்டுப் போட்டுட்டு  கண்டெய்னரோட தப்பிக்கிறாங்க. அந்த ஆறு கண்டெய்னர ஒரு அரசியல்வாதியோட கேஸ் பிளாண்ட்ல பதுக்கி வைக்கிறாங்க. அந்த துப்பாக்கி கண்டெய்னர எப்படியாவது பறிமுதல் பண்றதுதான்  NIA டீமோட டாஸ்க். இந்த கஷ்டமான டாஸ்க்க 16 வருஷம் மெண்டலாக இருந்த சிவகார்த்திகேயன் உதவியோட செய்கிறாரு பிஜு மேனன். மென்டலா இருந்தவரு எப்படி NIA டீமோட ஜாயின் பண்றாரு. அதுக்கப்புறம் அந்த கண்டெய்னர கைப்பற்றினாங்களா இல்லையா அப்படின்றது தான் படத்தோட மொத்த கதையும்.

முருகதாஸ் சூர்யாவ வச்சு கஜினி என்ற படத்தை எடுத்தார் அது மிகப் பெரிய வெற்றி படமாகி வசூலை வாரிக் குவிச்சது. அதுல சூர்யா ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார் தன் காதலியை கொண்ண வில்லன்களை பழிவாங்கறது தான் அந்த படத்தோட கதை.
அதே கதையை அப்படியே மதராசியில் உல்டா பண்ணி வச்சிருக்காரு ஏ ஆர் முருகதாஸ்.  கஜினில சூர்யாவுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற நோய் இருக்கும். மதராசில சிவகார்த்திகேயனுக்கு Fregoli delusion  என்ற நோய் இருக்கும். கஜினி படத்தோட அந்த லவ் போர்ஷன அவ்ளோ அழகா இன்ட்ரஸ்டிங்கா பண்ணி இருப்பாரு  முருகதாஸ்.

சரி கஜினி மாதிரி இந்த படம் ஹிட் ஆயிடுச்சான்னு கேட்டா அது தான் இல்ல. சொதப்பி வெச்சிருக்காரு முருகதாஸ். இரண்டு படத்துலயும் உள்ள ஒரு ஒற்றுமை என்னன்னா தன் காதலிக்காக வில்லன கொல்றது தான் மையக்கரு.
விஜய்க்கு அப்புறம் அடுத்த தளபதி என்று பெயர் வாங்க போறதா பேச்சு அடிபடறதால விஜயோட படத்த லைட்டா ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிட்டாரு முருகதாஸ். துப்பாக்கி படத்தோட டைட்டில துப்பாக்கி பொருளா மாத்திக்கிட்டாரு. அப்புறம் அந்த படத்தோட வில்லன இந்த படத்தில வில்லன் ஆகிட்டாரு. ஸ்லீப்பர் செல்ஸ் அப்படின்ற சீன்களை இந்த படத்திலும் சீனா வெச்சிருக்காரு.

இந்த படத்தில என்ன ஒரு கொடுமைனா NIA teamla பல பேரு செத்துருப்பாங்க. பொதுமக்கள்ள சில பேரு செத்துருப்பாங்க அத பத்தி நாட்டுல எந்த பரபரப்பும் இருக்காது.  NIA இந்த டாஸ்க்க யாருக்கும் தெரியாம சீக்ரெட்டா செஞ்சு முடிப்பாங்க. துப்பாக்கி கண்டெய்னர இந்தியாவுக்கு உள்ளாரையே கொண்டு வந்துருவாங்க அந்த கேங். ஆனா தமிழ்நாட்டுக்குள்ளார மட்டும் கொண்டு போயிடக்கூடாதுன்னு NIA TEAM துடிக்கிறாங்க. இது என்ன லாஜிக்னே புரியல இந்தியாகுள்ளார கொண்டு வந்தா பரவாயில்லையா? தமிழ்நாடு என்ன தனி தீவாவா இருக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷலா ஒரு அக்கறை NIA வுக்கு அப்படின்னு தான் கேட்க தோணுது. அப்ப  மத்த ஸ்டேட்ல துப்பாக்கி கொண்டு வந்தா பரவாயில்லையா? இது ரொம்ப அபத்தமா இல்லையா இத சொன்னா ஒரு டீம் வந்து படத்த படமா பாருங்க லாஜிக் எல்லாம் கேட்காதீங்கன்னு சொல்லுவாங்க.

ஆறு கண்டெய்னர்ல இருக்குற துப்பாக்கிய தமிழ்நாட்டுல புழங்க விட்டா தமிழ்நாடு சீரழிஞ்சிடனும்னு தவியா தவிப்பாரு பிஜு மேனன் இந்த பிரச்சனை அவரோட சொந்த பிரச்சினை மாதிரி ரகசியமா டீல் பண்றாரு. இதுல தன்னோட மகனையும் பலி  கொடுத்துடுறாரு ஆனா அந்த டீம் துப்பாக்கிகள தமிழ்நாட்டில உள்ள எல்லா Districtலையும்  புழங்க விட்டுறுவாங்க. இதுக்கு மேல எங்க தடுக்கிறது ஆனால் அதுக்கப்புறம் தான் கதையே நகத்துறாங்க.

சிவகார்த்திகேயன் 16 வருஷமா பைத்தியம் ஆனதுக்கு அவரோட குடும்பம் மொத்தமா வேன் விபத்துல எரிஞ்சு போயிடுறாங்க. அந்த விபத்த நேரடியா பார்த்ததால மெண்டல் ஆகிடுறாரு.  அந்த குடும்பமே சாகுற  சீன் ஆடியன்ஸ்க்கு டெப்தா கனெக்ட் ஆகல. தலைவாசல் விஜயோட ட்ரீட்மெண்ட்ல 16 வருஷம் மெண்டலா இருந்தவரு அதே மாதிரி எங்க விபத்து நடந்தாலும் ஓடிப்போய் காப்பாத்துறாரு. இதுதான் அவரோட நோய்னு சொல்றாங்க மனிதநேயத்தோட காப்பாத்துறத எப்படிங்க நோய்னு  சொல்ல முடியும்.

ஆபத்துல இருக்குறவங்கள காப்பாத்தாம இருக்குறவங்க தான் நார்மலான பீப்பிள்னு ஒரு தியரி சொல்றாங்க.  இப்ப  யாராவது அடிபட்டு ரோட்ல கிடந்தா நாம காப்பாத்தணுமா? வேணாமா? அப்ப  காப்பாத்தாம வேடிக்கை  பாக்கணும்னு தான் டைரக்டர் சொல்ல வர்றாரா. இப்ப சினிமாவுல KPY பாலான்ற  நடிகர் எல்லோருக்கும் ஓடி ஓடி ஹெல்ப் பண்றாரு. அப்ப   அவரு நோயாளியா?
நெறைய பேரு டெய்லி அன்னதானம்  போடுறாங்க அவங்க கிட்ட கேட்டா நான் சின்ன வயசுல சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டேன். அதனால நான் சம்பாதிச்சு என்னால முடிஞ்ச அளவுக்கு அன்னதானம் பண்றேன்னு சொல்லுவாங்க. சில பேர் நிறைய பேர படிக்க வெப்பாங்க காரணம் நான் படிக்கல படிப்போட அருமை எனக்கு புரிஞ்சதால இப்ப நெறைய பேத்த படிக்க வெக்கிறேன்னு சொல்லுவாங்க. அப்ப  இவங்க எல்லாம் நோயாளியா?
ஒரு பொண்ண ஒருத்தன் முகத்துல ஆசிட் அடிச்சிடுவான் அவன ஹீரோ தட்டிக் கேட்காமல் கடந்து போய்டுவான். அதுக்கு காரணம் லவ் தான்னு டாக்டர் சொல்ல அதை காரணமா வச்சு ஹீரோயின் ருக்மணி வசந்த் ஹீரோவ பிரிஞ்சு போயிடுறாங்க. இது மாதிரி ஒரு அபத்தமான காரணம் இருக்க முடியுமா! குடும்பமே எரிஞ்சு போன பாதிப்ப பார்த்து பதினாறு வருஷமா மெண்டலா இருந்தவன். ஒரு மாசத்துல வந்த லவ்வுல மாறிப் போயிடுவானா. அப்ப  காதல் ஒருத்தன் மூளையை மழுங்கடிக்கும் அப்படித்தான  சொல்ல வர்றாரு டைரக்டர்.

அது போகட்டும் வலிமையான NIA என்ற அமைப்பு இந்தியாவில் இருக்கிற எந்த சோர்சையும் நம்பாம ஒரு பைத்தியக்காரனை நம்புதுனா அது எவ்வளவு வீக்கா இருக்கும். நாட்டுக்காக உயிரை கொடுக்க தயார்படுத்தப்பட்ட NIA வீரர்கள். உயிரக் குடுக்க ரெடியா இருந்தாலும்  உயிர் பத்தின மதிப்பே தெரியாத ஒரு பைத்தியத்தை சாக அனுப்புறது எவ்வளவு  குரூரத்தின் உச்சம்.
தமிழ்நாட்டுக்குள்ளாரா துப்பாக்கி வந்துட கூடாதுன்னு அக்கறையா இருக்குற பிஜுமேனன் ஒரு உயிர் மேல பாரபச்சமின்றி நடந்துக்கிறது அறமான சிந்தனையா எல்லா உயிரும் உயிர் தானே தற்கொலை கூடாது அது தப்புன்னு அவங்களுக்கு கவுன்சிலிங்  கொடுக்கணும்னு சொல்ற இந்த காலத்துல தற்கொலை பண்றவன ஊக்கப்படுத்துற மாதிரி சீன் வைக்கிறது சமூக கேடான விடயமில்லையா?

இந்திய நாட்டுக்காக ராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் முகுந்த் கேரக்டர்ல நடிச்ச சிவகார்த்திகேயன் எப்படி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அப்ப  இவங்களுக்கு சமூக அக்கறை எல்லாம் எங்க இருக்கு. மக்களோட ரசனைக்காக ஆக்சன் ஹீரோவா நடிச்சு மக்கள ஏமாத்தி பணம் சம்பாதிக்கணும் அதுதானே இவங்களோட நோக்கம்.
இதுக்கு மேல இந்த கதையில நல்லது கெட்டத சொல்லி என்ன ஆகப்போகுது. ரசிகர்கள் தியேட்டரில் கைதட்ட வேண்டுமென்பதற்காக படம் எடுக்க எந்த லாஜிக் இல்லாமல் சண்டைக் காட்சிகளை கொடுப்பதுதுதான் இன்றைய இயக்குனர்கள், நடிகர்களின் வேலையா?
சமீப காலமாக வரும் ஆக்சன் படங்கள் நம்மை தெலுங்கு பட ரசிகர்களின் மனநிலைக்கு மடை மாற்றிக் கொண்டிருக்கின்றன. பாலையா போன்ற தெலுங்கு நடிகர்களை தெலுங்கு பட உலகில் இன்றளவும் உச்சத்தில் இருப்பதற்கு இந்த மாதிரியான லாஜிக் இல்லாத ஆக்சன் படங்களின் ரசனையே காரணமாக இருக்கின்றது.

அதே மாதிரியான படங்களை எடுத்து தமிழக  ரசிகர்களின் ரசனையை மலினப்படுத்துவது தான் இவர்களின்  நோக்கமாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன். கூலி,  மதராசி போன்ற படங்களை தமிழ் ரசிகர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அது நமது ரசனையை உலக தரத்துக்கு கொண்டு செல்லாமல் குறுகிய வட்டத்திற்குள்ளே சிக்க வைத்து விடும். 

நடிகர்களை பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக ரசிக மனப்பான்மையில் அவர்களின் படங்களை வசூல் ரீதியாக வெற்றி பெற செய்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமம். அப்படி செய்தால்  மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இதே போன்ற தரமற்ற படங்களை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் இதை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழ் சினிமாவிற்கு நல்லது என்றே நான் கருதுகிறேன்

நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் இப்ப நாம எந்த படத்தை பத்தி பார்க்க போகிறோம்னா. விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படத்தை  பத்தி பார்க்க
சினிமா சினிமா விமர்சனம்

மாரீசன்- சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் – நாம இப்ப எந்த படத்தை பத்தி பாக்க போறோம்னா வடிவேலு, பகத் பாஸில் நடிச்ச மாரீசன் படத்தை பத்தி பாக்க போறோம். படம்