1962 ல் அண்ணாவின் வெற்றித் துவக்கம்.

1962 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற திருச்செங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோட கவுண்டரும் திமுக சார்பில் சே கந்தப்பனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசியலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, மா. பொ. சி. தமிழரசுக் கழகம், ஜன சங்கம், தமிழ் தேசிய கட்சி, சோசியலிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக இருந்தனர். திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டும் ஆதரித்தது. பணபலம் படைபலம் அமைச்சர்களின் தீவிரப் பிரச்சாரம் எல்லாம் காங்கிரசுக்கு இருந்தது திமுக வேட்பாளருக்கு திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தனர்.

அண்ணா 10 வார சிறை தண்டனையில் இருக்கிறார். கருணாநிதி உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் போராட்டத்திற்காக சிறை சென்று இருப்பதால் திமுகவில் யாரும் பிரச்சாரம் செய்ய முடியாததால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நிலையில் மக்கள் அமோகமாக வாக்களித்து, இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தனர். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி வெற்றி பெறும் முதல் தேர்தல் இதுதான். அந்த துவக்கத்தை அண்ணாதான் முதன் முதலில் தொடங்கி வைத்தார்.




