அரசியல் தலைவர்கள்

அண்ணா! அண்ணா! அண்ணா! எங்கள் அன்பின் உருவம் அண்ணா!

அண்ணா பிறந்தநாள் சிறப்பு கட்டுரை-15.09.2025

பேரறிஞர் அண்ணா தன் வரலாறு பற்றி தம்பிக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்ட சில வித்தியாசமான, வியப்பான செய்திகளை சுருக்கமாக வாசகர்களுக்கு தெரிவிக்க விளைகிறேன். அந்த செய்தியின் சுவையை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாருங்கள் தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதத்தின் வாயிலாக அவரிடம் சென்று சேர்வோம்.

1926 SSLC யில் கணிதத்தில் மார்க் குறைந்ததால் இரண்டு முறை பெயில் ஆனார் அண்ணா.

SSLC படிக்கும் போது பொடி மட்டையை மடியிலேயே வைத்திருந்து மூக்கில் போட்டுவிட்டு மீண்டும் மடியில் மறைத்து வைத்துக் கொள்வார்.

1928 இல் பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் மீடியட்டில் சேர்ந்தார் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சலுகையில் பி ஏ ஹானர்ஸ் படிப்பில் சேர்ந்தார்.

படிக்கும் நாட்களிலே வெற்றிலை புகையிலை போடும் பழக்கம் இருந்ததால் வகுப்பறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருப்பார் வெளியே கேட்கும் சத்தங்களை கேட்டுக் கொண்டே இருந்தாலும் பாடத்தில் மிகவும் கவனமாக இருந்தார் அண்ணா

1932 ல் நீ பொருளாதாரத்தை உன்னால் படிக்க முடியாது என்று ஒரு உயர்சாதி ஆசிரியர் சொன்னார். மறுத்து அதே படிப்பில் படித்து முதல் வகுப்பில் தேறினார்.

10-9-1930 இல் ராணி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்

1935இல் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது. அப்போது பி ஏ ஹானர்ஸ் தேர்வு எழுதி இருந்தார் திருப்பூரில் இளைஞர் மாநாடு நடந்தது அதில் தான் பெரியார் அவர்களை சந்தித்தார். அவருடன் 14 வருடங்கள் பயணித்தார். ஒரு நாள் கூட அண்ணாவை அவர் கடிந்து கொண்டதே இல்லை. ஒரு பிள்ளை போல் அவருக்கு பணிவிடை செய்தார்.

ஒருமுறை காசிக்கு அவருடன் சென்ற போது பெரியாரின் தோற்றத்தை பார்த்து சாமியார் என்று நினைத்துக் கொண்டார்கள். என்னை அவரின் சீடர் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆரிய தர்மத்தை வளர்த்துக் கொண்டிருந்த சிரத்தானந்தா, பெரியாரை கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு போதனை செய்ய அழைத்தார். நான் பயந்தேன் நம்முடைய கொள்கைகளை பெரியார் எப்படி அந்த மாணவர் கூட்டத்தில் பேசுவார். அப்படி பேசினால் சிக்கல் ஆகி விடுமே என்று பயந்தேன். ஆனால் பெரியார் மாணவர்களுக்கு புரியும்படி இலகுவாக பேசினார். ராமாயணத்தை பற்றி பேச எல்லோரும் அதைக் கேட்டு நெளிந்தார்கள். அதன் பிறகு அந்தக் கூட்டம் முடிந்தவுடன் ராவணனுக்கு ஜே என்று மாணவர்கள் கோஷம் போட்டபடி கலைந்து சென்றார்கள். அந்த அளவுக்கு தன் கருத்தை பக்குவமாக சொல்லக்கூடியவர் பெரியார்.

சிறைச்சாலையில் ஆறு நூறு அபராதம் கட்ட சொன்னார்கள் நான் அதை மறுத்ததால் என்னை சிறையில் அடைத்தார்கள். “ஆரிய மாயை” என்ற நூலை எழுதியதற்காக என்னையும், “பொன்மொழிகள்” எழுதியதற்காக பெரியாரையும் சிறையில் ஒன்றாக அடைத்தார்கள். இருவரும் பக்கத்து பக்கத்து சிறையில் அடைக்கப்பட்டோம். பெரியாரை சந்திக்காமல் இருக்க நாங்கள் கண்காணிக்கப்பட்டோம். விடுதலை ஆகும் சமயத்தில் பெரியார் ஒரு பணியாளரிடம் எனக்கு நாலு பிஸ்கட்டுகளை கொடுத்து அனுப்பினார்.

ஹரித்துவார் வரவேண்டும் என்று பெரியார் ஒருமுறை சொல்ல நான் உடனே புறப்பட்டேன். ஹரித்துவாரில் 10 நாட்கள் பெரியாருடன் தங்கினேன். பெரியார் இங்குதான் வால்மீகி ராமாயணத்தின் குறிப்புகளை எழுதினார். சாதுக்கள் நிரம்பிய அந்த ஊரில் பெரியார் வெண்ணிற தாடியுடன் ஆரஞ்சு கலர் சால்வை அணிந்து வெளியே செல்வார் அவருடன் நானும் குளிருக்கு இதமான ஜாக்கெட் அணிந்தபடி செல்வேன். அப்படி செல்லும்போது வீதியில் இருப்பவர்கள். குருவும் சீடரும் செல்கிறார்கள் என்று எங்களை வணங்கி நிற்பார்கள்.

பாரதிதாசனுக்கு பாராட்டு விழா நடத்தி அவருக்கு பரிசு பணம் அளித்தோம் அதைப் பெற்றுக் கொண்ட பிறகு இருவரும் குதிரை வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது பாரதிதாசன் என்னிடம் இந்தப் பணத்தை வைத்து இருவரும் “நாம் தமிழர்” என்ற அரசியல் கட்சியை துவங்குவோம் என்று கேட்டார் அதற்கு நான் நீங்கள் இந்த பணத்தை வைத்து அழகான மலைகள், நதிகள், பொலிவான இடங்களுக்கு சென்று வாருங்கள். வந்த பிறகு அந்த அழகான இடங்களைப் பற்றி கவிதையாக தீட்டுங்கள். நான் அரசியலில் அல்லல்படுவதை பார்த்து அப்புறம் நீங்களே நிம்மதி அடைவீர்கள் என்று சமாதானம் சொன்னேன்.

நண்பன் நாராயணசாமிக்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தை எழுதினேன். அதில் நடிக்க கணேசனாக வந்தவரை “சிவாஜி கணேசன்” ஆக மாற்றினார் நாராயணசாமி. அவர்தான் என்னையும் கலைத்துறைக்கு அழைத்துச் சென்றார்.

என்னை பெரிதும் கவர்ந்த புத்தகங்கள் “கலிங்கத்துப்பரணி”, பைட் எழுதிய “நெப்போலியன் வரலாறு”, கிப்பன் எழுதிய “ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்”, “சைமன் பொலிவர்”, “கரிபாலிட்டி”, “அலெக்சாண்டரின் ஆற்றல்”, “ஜூலியஸ் சீசரின் வீரம்”, “நெப்போலியன் போரார்வம்”, “கரிகாலன்”, “ராஜராஜ சோழன்”, “குலோத்துங்கன்”, “ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்”, ஆடல் அரசன் ஆட்டனத்தி கட்டபொம்மு,” “தேசிங்கு ராஜா” புலிகேசியை தோற்கடித்த “பரஞ்சோதியின்” பேராற்றல், “எமிலி ஜோலா வரலாறு”, “இங்கர்சால்”, “புத்தர் துறவு”, “சாக்ரடீஸ் வழக்கு மன்றத்தில் நின்று பேசுவது”, “இயேசு சிலுவையில் அறையப்படுவது”, “இளங்கோவடிகளின் துறவு”, “மணிமேகலையின் மன உறுதி”, “கண்ணகியின் கேள்விக்கணைகள்”, “மாதவியின் மன நெகிழ்ச்சி”, “அசோகனின் துக்கம்”, “சகுந்தலையின் சோகம்”, “திருக்குறள்”

கலைத்துறையில் உள்ள கலைஞரை அமைச்சராக்கினால் அவர் ஈடுபாட்டுடன் பணி செய்வாரா என்ற ஐயப்பாடு எல்லோருக்கும் இருந்தது. எவர் ஒருவர் கலைத்துறையில் திறமையாக பணி செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பின்னாளில் சிறப்பாக நிர்வாகத்தில் செயல்பட முடியும் என்று கூறினேன்.

காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட நாடு பார்ப்பனருக்கு எதிராக கொதித்து எழுந்தது. அச்சமயம் சென்னை வானொலியில் பேச அழைத்தார்கள். தூய எண்ணம் கொண்டிருந்ததால் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசினார் அண்ணா

நான் ஒரு பெரிய சோம்பேறி என்று என்னிடமே சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று கூறுகிறேன். திராவிட நாடு பத்திரிகைகளில் ஒரு சில கட்டுரைகளைத் தவிர எல்லா கட்டுரையும் நானே எழுதுகிறேன் என்றேன். ஆனால் அதே சமயம் ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கும் நாவலர் நெடுஞ்செழினை கண்டு வியப்பில் ஆள்கிறேன்

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு அதிலே ஒன்று “கனவு காண்பது” மற்றொன்று மிகவும் கஷ்டமான நெருக்கடியின் போது சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே இருப்பது. எனக்கு சரியான ஜோடியாக சம்பத் இருப்பதாக பெரியாரே சுட்டிக்காட்டுவார்.

ஒரு சமயம் திருச்சியில் நடக்கும் திராவிட கழக மாநாட்டு ஏற்பாட்டின் போது நானும் சம்பத்தும் மாடியில் இருந்து கொண்டு சிரித்து கும்மாளமடித்துக் கொண்டிருந்ததை கண்ட பெரியார் இப்படி பொறுப்பில்லாமல் இருவரும் எப்படி கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கடிந்து கொண்டார்.

சென்னையில் நடத்திய பந்தில் லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அதற்கு பி டி ராஜனும் ம பொ சியும் தலைமை தாங்கினார்கள். அந்தக் கூட்டத்தை வழிநடத்த பார்வையிட இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் குள்ளமாக இருந்ததற்கு அன்றுதான் வருந்தினேன்.

ஒரு சமயம் அண்ணாவுக்கா, நேருவுக்கா யாருக்கு தேர்தலில் செல்வாக்கு இருக்கிறது என்று பக்தவச்சலம் பிரச்சாரத்தில் கேட்டார். அதற்கு என்னைக் கேட்டாலே நானே சொல்வேனே நிச்சயமாக நேருவுக்கு தான் செல்வாக்கு அதிகம். உண்மை தானே அவர் ஏற்கனவே வளர்ந்து விட்டார். நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பொறுமையும், நிதானமும் உண்டு என்று கூறினேன்.

தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதற்கு சங்கரலிங்கனார் 60 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம் அப்போது அமைதியாகவே இருந்தது. ஆனால் ஆந்திராவுக்காக பொட்டி ராமலு உண்ணாவிரதம் இருந்தபோது ஆந்திர தேசமே கொதித்து எழுந்தது. ஆனால் தமிழகத்தில் இப்படி அமைதியாக இருந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று வருந்தினார் அண்ணா.

வடநாட்டில் உள்ள அலிகார் நகரத்திற்கு சென்றோம். அப்போது நண்பர்களுடன் ஒரு இஸ்லாமியர் கடைக்கு டீ குடிக்க சென்றோம். அங்குள்ள சிலர் எங்களைப் பார்த்தால் இந்துக்கள் மாதிரி தெரிகிறது நீங்கள் ஏன் முஸ்லிம் கடையில் டீ குடிக்க செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் பரவாயில்லை அந்த கடையில் தான் டீ குடிப்பேன் என்று சொன்னேன். ஆனால் அந்த இஸ்லாமிய டீக்கடைக்காரர் எங்களுக்கு டீ கொடுக்க சம்மதிக்கவில்லை. காரணம் கேட்டதற்கு இன்று ஒரு நாள் நீங்கள் டீ குடித்துவிட்டு சென்று விடுவீர்கள் நாளையிலிருந்து நான் தான் அவர்களிடம் அடி வாங்க வேண்டியதாக இருக்கும் என்றார். இப்படித்தான் வடநாட்டில் இஸ்லாமியர்களின் நிலை இருக்கிறது என்று வருத்தம் அடைந்தேன்.

1962 தேர்தலில் நான் தோல்வியடைந்து 50 பேர் வெற்றி அடைந்த பிறகு எல்லோரும் வருத்தத்துடன் இருக்க அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு விஷயத்தை சொன்னேன். நான் தோல்வியடைந்த செய்தி கேட்டபோது பெங்களூரில் ஜெய் நகரில், ஜெயவிலாஸ் என்ற இல்லத்தில் தங்கி இருந்தேன் அதுதான் விசித்திரம் என்று அவர்களுக்கு சொன்னேன்.

இடது தோளில் வீக்கம் வலி காரணமாக மருத்துவர்கள் பரிசோதிக்க ஆர்தரடிஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறுகின்றனர். கால் எலும்பு முறிந்த எம்ஜிஆரை நன்றாக நடக்க வைத்த டாக்டர் நடராஜன் இப்போது எனக்காக மருத்துவ சிகிச்சை செய்ய துவங்கினார்

50,100 பேர் கொண்ட முக்கிய நாளிதழ்களின் நிருபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேச என்னை அழைத்தார்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு நிருபர் எழுந்து வெளியே செல்லும்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது, கூச்சல் குழப்பம் என்று நாளை தலைப்பு போட போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆகையால் எனது இந்தி எதிர்ப்பு உரையை நீங்கள் பொறுமையாக கேளுங்கள் நீங்கள் எப்படியும் அந்த நிருபர் சொன்ன மாதிரி தலைப்பை நாளை பிரசுரிப்பீர்கள் அது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. இருந்தாலும் என்னுடைய உரையை கேளுங்கள் என்று சொன்னவுடன் எல்லோரும் அமைதியாகி உரையை கேட்டார்கள். அதன் பிறகு மறுநாள் எல்லா பத்திரிகைகளும் தலைப்பில் இந்தி எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது என்று தலைப்பாக வந்தது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரியாரை சந்திக்கும் போது அவர் எனக்கு பொன்னாடை போர்த்தினார் எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது ஈரோட்டில் அவரை முதன் முதலில் சந்தித்தபோது எனக்கு சால்வை அணிவித்தது அப்போது ஞாபகத்திற்கு வந்தது

பெரியார் எடுத்துக்கொண்ட பணி சமுதாயத்தை மாற்றி அமைக்கும் பணி, அது ஒரு புரட்சிகரமான பணியாகும் உலகத்திலே எந்த நாட்டிலும் ஆட்சியால் சாதித்ததை விட தனிப்பட்ட சீர்திருத்தவாதியால் தான் சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது.

“இன்று முதல் பெரியார் இருக்கின்ற இடத்தில் நான் இருப்பேன்”, “நான் இருக்கிற இடத்தில் அவருடைய கருத்து இருக்கும்” என்றார் அண்ணா

பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர்கள் மிகப் பலர். அவருடன் மற்றைய பலரை விட இடைவிடாது கூடவே இருந்திருக்கும் வாய்ப்பை பெற்றவன் நான். இன்னும் நினைவிலே கொண்டு வரும்போது அந்த நினைவு இனிமை பெறுகின்றேன்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதனை நான் கற்றுணரும் வாய்ப்பு தந்தார் பெரியார்.

நான் கண்டதும், கொண்டதும் அந்த ஒரே தலைவனை தான்

பெரியாரின் 89 ஆவது பிறந்தநாள் விழாவில் நான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாகிலும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால் இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது தான் மிகப்பெரிய மகிழ்ச்சி தருவதாகும்.

தமிழக அரசு படிப்படியான மாறுதல்களையும் வளர்ச்சியையும் விரும்புகிறது. அவை நிலைத்து நிற்கும்.

இந்த நேரத்தில் இறுதியாக உங்களிடம் ஒன்றை விவிலிய நூலில் இருந்து எடுத்துரைக்க விரும்புகிறேன் “எப்பாடு பட்டேனும் என்ன நிகழ்ந்தாலும் எங்கள் மீது சுமத்தப்பட்ட சிலுவையை பொறுப்புகளை எடுத்துச் செல்வோம் மக்களை அழைத்துச் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வோம்”

வலியை தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதை செய்து கொண்டிருக்கின்றேன். எனக்கு ஏன் கை வலி தெரியுமா எழுதுவதால் தானே கை வலிக்கிறது. நான் யாருக்காக எழுதுகிறேன் என் தம்பிகளுக்கு அல்லவா கடிதம் எழுதுகிறேன். தனியானதொரு சுவையை அதுதான் தருகிறது

இந்த தம்பிக்கு கடிதத்தை கடிதத்தின் மூலம் நம்முடன் என்றும் உரையாடிக் கொண்டிருக்கிறார் பெருந்தகை பேரறிஞர் அண்ணா. அவரின் இந்த பிறந்த நாளில் அவரை பெரு உவகையோடு நினைவு கூறுவோம். அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்.

நன்றி வணக்கம்

ஃப்ரெடி டிக்ரூஸ் 

admin

About Author

1 Comment

  1. prakash

    September 15, 2025

    annavin katturai super

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K – அரசியல் கட்டுரை- பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 தேர்தல்  D.M.K Vs T.V.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது என்பது