சினிமா சினிமா விமர்சனம்

பேர்ட் கேர்ள் – BAD GIRL – MOVIE REVIEW

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக பணிபுரிந்த வர்ஷா இயக்கிய முதல் படம் பேட் கேர்ள் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். இப்படி ஒரு படத்தை கொடுத்த இருவருக்கும் முதலில் பாராட்டுக்கள்.
சரி இந்த படத்துக்கு எதுக்கு பேட் கேர்ள்னு   டைட்டில் வச்சாங்கன்னு எனக்கு புரியல. ஏன்னா இந்த டைட்டிலுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படம் வெளிவரதுக்கு நெறைய சிக்கல சந்திச்சதுனு  தெரியும்.
இந்த எல்லா சிக்கல்களுக்கும் காரணம் இந்த படத்தோட காட்சி  அமைப்போ, கதையோ இல்லை படத்தோட டைட்டில் தான். இவங்க படத்துக்கு சம்பந்தமே இல்லாம பேட் கேர்ள்னு  ஒரு டைட்டில வெச்சிட்டு தேவையில்லாத பிரச்சனையை இவங்களே இழுத்து விட்டுட்டாங்க .  இது ஏன்  வெற்றிமாறனுக்கும் புரியாம போச்சுன்னு தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. சாதாரண பிரச்சனையை  காம்ப்ளிகேட்டடா  மாத்திக்கிட்டாங்களோனு தோணுது.
இந்த படத்த நாம பாராட்டுனதுனால படம்  ஆகா, ஓகோன்னு இருக்குதுன்னு நினைக்காதீங்க. இது ஒரு ஆவரேஜான படம் தான். ஏன் இந்த பாராட்டுக்கள்னா இயக்குநர் பாக்யராஜோட  இது நம்ம ஆளு படம் மாதிரி ஒரு புரட்சிகரமான படமா இல்லனாலும் ஓரளவு சாஸ்திர சம்பிரதாயங்களை தாண்டி சமூகம் எந்த அளவுக்கு மாறி இருக்குனு காட்டக்கூடிய அளவுக்கு  எடுக்கப்பட்ட படம் தான் இந்த பேட் கேர்ள். அதுக்குத்தான் நம்ம மேல சொன்ன பாராட்டுக்கள்.

சரி இந்த  படத்தோட கதை என்னன்னா ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் உள்ள ஒரு டீன் ஏஜ் பொண்ணோட வாழ்க்கை தான் கதை. 15 வயசுல இருந்து 32 வயசுக்குள்ள ஆச்சாரங்கள் கட்டுப்பாடுகளால அந்த பொண்ணுக்கு மனரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் எப்படி நிகழ்துன்னு சொல்ற படம் தான் பேட் கேர்ள். எனக்கு தெரிஞ்சு இந்த படத்துக்கு கண்பியூஸ்டு கேர்ள்னு பேரு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்.
படத்துக்கு பிளஸ்னு சொன்னா ஹீரோயினோட நடிப்பு அப்புறம் அம்மாவா நடிச்ச நிஷாந்தியோட நடிப்பு. ரெண்டு பேரும் ரொம்ப எதார்த்தமா பண்ணி இருக்காங்க. அதுக்கப்புறம் நெறைய இடத்துல நல்ல வசனங்களை இயக்குனர் எழுதி இருக்காங்க. ஆனா அந்த வசனம் ஃபுல்லாவே படம் முழுக்க பேசிக்கிட்டே இருந்தா கொஞ்சம் போர் அடிச்சிடும். சினிமா விஷுவல் மீடியம். அதுல டயலாக் மட்டுமே வச்சு பில் அப் பண்ணா இன்ட்ரஸ்டிங்கா இருக்காது. அது பிரீச்சிங்கா மாறிடும். ஹீரோயினோட  ஸ்கூல், காலேஜ், வொர்க்னு கூடவே பயணிக்கிற பிரண்ட்ஸ்ங்க எல்லாருமே ரொம்ப தெளிவா இருக்காங்க. ஆனா இந்த பொண்ணு மட்டும் தான் கன்பியூஸ்டாவே இருக்குது.  இத்தனைக்கும் சாஃப்டா, கைண்டா பிஹேவ் பண்ற அம்மா எவ்ளோ எடுத்து சொன்னாலும். அந்த பொண்ணுக்கு புரியவே  மாட்டிக்குது. ஒரு இடத்துல அம்மா நிஷாந்தி சொல்லுவாங்க நீ நல்லா படிச்சு ஃபாரின்ல போய் செட்லானா  இஷ்டம் போல வாழலாம், சார்ட்ஸ் போடலாம், பிடிச்சத சாப்டுலாம் ஆச்சாரத்தை கடைபிடிக்க  தேவையில்லை அப்படின்னு ஒரு இந்திய பிராமண குடும்ப வாழ்க்கையோட  எதார்த்தமான சிக்கல  சொல்லுவாங்க. ஆனா அந்த பொண்ணுக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது. படத்துல ஆண்கள்  எல்லோருமே  பெண்கள யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுறாங்கன்னு  சொல்றது கொஞ்சம் அன்னெத்திக்கலா இருக்கு. இதே மாதிரி பெண்களும் பண்றாங்க  அதுக்கு காரணம் அவங்களுக்கு ஏற்படுற சூழ்நிலை. நாம ஒரு சாரார மட்டும் குத்தம் சொல்றத விட்டுட்டு யதார்த்தத்த சொல்லனும்.
எல்லா பெண்களும், ஆண்களும் இண்டிபெண்டன்டா வாழனும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை நோக்கி நாம போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குது.  ஒரு பெண்  நல்லா படிச்சி டீச்சர் வேலைக்கு போயி கை நெறையா சம்பாதிச்சாலும் பழைய சாஸ்திரம், சம்பிரதாயத்தை கட்டிக்கிட்டு தொங்க வேண்டியது தான் நம்ம பெண்களோட நெலைமைனு அம்மா கேரக்டர் மூலியமா டைரக்டர் சொல்லி இருக்கிறது ரொம்ப சிறப்பு . படத்துல வர்ற டீன் ஏஜ் கதாபாத்திரங்கள் சென்னை மாதிரியான மெட்ரோ பாலிட்டன் சிட்டில வாழ்ற ஹை சொசைட்டியில் மாடர்ன் மைண்ட் உள்ள டீன் ஏஜ் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறைனு தான் இந்த படத்த எடுத்துக்க முடியும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு டீன் ஏஜ் இளம் பெண்களின் படமாக நாம இந்த படத்தை எடுத்துக்க முடியாது. எனவே எல்லாருக்கும் இந்த படம் புடிக்கும்னு சொல்ல முடியாது. அது தியேட்டர்ல முதல் நாள் முதல் காட்சியில் வந்திருந்த பெண்களின் உடை, தோற்றத்தை வெச்சே கணிச்சிர்லாம். மாடர்ன் திங்கிங் உள்ள பெண்கள் மட்டும் தான் இந்த படத்தை தங்களோட ஈசியா கனெக்ட் பண்ணிப்பாங்கன்னு  நா நெனைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் இப்ப நாம எந்த படத்தை பத்தி பார்க்க போகிறோம்னா. விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படத்தை  பத்தி பார்க்க
சினிமா சினிமா விமர்சனம்

மாரீசன்- சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் – நாம இப்ப எந்த படத்தை பத்தி பாக்க போறோம்னா வடிவேலு, பகத் பாஸில் நடிச்ச மாரீசன் படத்தை பத்தி பாக்க போறோம். படம்