அரசியல் ஆசிரியரின் பார்வை

காங்கிரஸின் கூட்டணி த.வெ.கவிற்கு தேவையா?

2014 க்கு முன் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீதும், அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொது கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் இருந்தன. இருப்பினும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள எல்லா சமூக மக்களையும் அரவனைத்துச் செல்லும் கட்சி என்று இன்றளவும் நம்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களிடம் பெரும் நம்பிக்கை பெற்ற கட்சியாகத்தான் இருக்கிறது. அந்த பொதுவான கருத்தாக்கத்தின் ஊடேதான் தலைவர் தளபதி விஜய் அவர்களும் காங்கிரஸ் கட்சியை விரும்புகிறார்.

தலைவர் தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை 02 பிப்ரவரி 2024 துவக்கிய பின் தமிழக வெற்றிக் கழகத்திடம் கூட்டணி வைப்பதற்கு முதல் தேர்வாக மாற்று கட்சியான காங்கிரஸ் கட்சியை முதலில் விரும்பினார். அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை விரும்பினார். இது அவரது தனிப்பட்ட விருப்பம். இந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியைக் கொண்டு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுக்கலாம் என்று விருப்பப்பட்டார். இந்த விருப்பத்தில் எந்த ஒரு சுயநலமும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை.

இதுநாள் வரை ஆண்ட கட்சிகள் கூட்டனி கட்சிகளுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் அளித்ததில்லை. அவர்களை கூட்டனியில் இணைத்துக்கொண்டு அவர்கள் மூலம் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஆட்சியிலும், அதிகாரத்திலும் துளி அளவு கூட பங்கு தராமல் புறக்கணித்து வந்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தளபதி அவர்கள் விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் மிகத் தெளிவாக தன்னுடைய நிலைப்பாட்டை முன் வைத்தார். அப்படி தளபதி என்ன பேசினார் என்பதற்கான “ரீக்கேப்” ஒன்றை இப்போது உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய அளவுக்கு வலுவும், தெம்பும், கட்டமைப்பும் உள்ள கட்சி. நம்முடைய தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே நின்று பெரும்பான்மை பெறக்கூடிய அளவுக்கு பலம் கொண்ட கட்சி. அப்படி ஒரு ஆற்றல் நம்மில் இருந்தாலும் நம்மை நாடி வரும் மாற்று கட்சியினருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என்று பெருந்தன்மையாக கூறினார். இந்த அழைப்பின் மூலம் ஒன்று நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் த.வெ.க தனித்தே நின்று வெற்றி பெறக்கூடிய தகுதி இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற உயரிய பண்பு மட்டும்தான் தெரிய வருகிறது.

இதுநாள் வரை இப்படி ஒரு வாக்குறுதியை எந்த ஆண்ட கட்சிகளும் இதுவரை கொடுத்ததில்லை. இனியும் கொடுக்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை கொடுக்க அவர்கள் முன்வந்தாலும் அதற்கு முழு முதற் காரணம் புதிதாக உதயமான த.வெ.க என்ற கட்சி மட்டுமே. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தவெக ஏற்படுத்திய தாக்கம் தான் அதற்கு காரணம். ஆனால் இந்த பெருந்தன்மையான அறிவிப்பை வி.சி.க கொளரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டு கடுமையான விமர்சனத்தை த.வெ.க மீது அள்ளி வீசியது. இரண்டு வருடமே ஆன கட்சி முப்பது வருடங்களுக்கு மேல் பயனிக்கும் நமக்கு பங்கு தருகிறோம் என்று சொல்வதா? என்று தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எந்த விதமான எதிர்வினைகளையும் த.வெ.கவும், தளபதியும் இன்று வரை செய்யவில்லை. அது தளபதியின் பெருந்தன்மையை காட்டுகிறது. தற்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை புரிந்து கொண்ட வி.சி.க அடடா த.வெ.கவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டோமே என்று உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருக்கும்.

தளபதி அவர்கள் ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்று சொன்ன இந்த உயரிய பண்பை புரிந்து கொள்ளாமல் யாராவது கூட்டனிக்கு வருவார்களா என்று த.வெ.க ஏங்கி தவம் கிடப்பது போல் பேசி வருகிறார்கள். மேலும் பல வாடகை வாய்களை வைத்து த.வெ.க கூட்டனி இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதனால் தான் எல்லோரையும் கூவி கூவி அழைக்கிறார்கள். அப்படி அழைத்தும் இதுவரை அவர்களை நம்பி யாரும் கூட்டனிக்கு வர மறுக்கிறார்கள் என்று வாய்க்கு வந்தபடி நையாண்டியாக பேசி வருகிறார்கள்.

ஆனால் வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்பதுதான் கள நிலவரம். இதை நாம் இறுமாப்போடு சொல்லவில்லை. தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டுதான் சொல்லுகிறோம். தமிழக அரசியல் களத்தில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய வல்லமை பெற்ற கட்சி, “தமிழக வெற்றிக் கழகம்” மட்டுமே. த.வெ.க யாரையும் கூட்டனியில் சேர்க்காமல் தனியாகவே நிற்கக் கூடிய அளவுக்கு தைரியமும், தெம்பும் கொண்ட கட்சி. நம்முடைய தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு மட்டும் தான் அந்த தைரியம் உள்ளது என்பதை மிகத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஆகவே வேற எந்த கட்சியும் இது போல் தனித்து நின்று தமிழக தேர்தலில் நின்று வெற்றிபெறக்கூடிய தைரியத்துடன் 2026 தேர்தல் களத்தில் இறங்குமா? என்று கேட்டால் 100% இல்லை என்றே சொல்லலாம். சரி நாம் தமிழர் கட்சி என்ற கட்சி தொடர்ந்து தேர்தலில் கூட்டனியில்லாமல் தனித்து போட்டியிடுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்டால். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை பிரிவினைவாதம் பேசும் கட்சி என்பதால் பெரும்பான்மை மக்கள் ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது. அது மட்டுமல்லாமல் அந்த கட்சியின் தலைவர் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றி மாற்றி பேசி வருவதால். அவர்களை மக்கள் நம்பத் தயாரில்லை. அதனால் அவர்களை நாம் பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை.

சரி கூட்டனி நிலைப்பாடைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சி மட்டும் தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையா? என்று நாம் கருதிவிட முடியாது. அந்த கட்சி ஒரு தேசிய கட்சி என்ற அடிப்படையில் தான் காங்கிரஸ் கட்சி தவெகவிற்க்குத் தேவையே தவிர அவர்கள் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியில்லை. இதுதான் யதார்த்தம், கள நிலவரம். மற்றபடி அக்கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறது என்றால் அதுவும் கிடையாது. பின்னர் எதற்காக அக்கட்சியை நாம் தொடர்ந்து நம்முடன் பயணிக்க வலியுறுத்த வேண்டும். இதுகாரும் அந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் இருந்தது. இனி வரும் காலங்களில் அவர்கள் கூட்டனிக்கு கண்டிப்பாக தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு போலி பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர். திரு.செல்வப்பெருந்தகை அவர்கள் நம்மை தொடர்ந்து ஊடகத்தின் வாயிலாக இழிவாகவும்,மலிவாகவும் பொருள்படும்படி பேசி வருகிறார். அதை நாம் மறுத்து பேசாமல் இருப்பதை வைத்து காங்கிரஸ் கூட்டணிக்காக தவெக தவம் இருப்பது போல் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லை என்றால் நம்மால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று ஊடகங்கள் வாயிலாகவும் சமூக. வலைதளங்கள் மூலமாகவும் நமக்கு எதிரான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போலியான கட்டமைப்பை நாம் உடைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாபெரும் மக்கள் சக்தி கொண்ட இயக்கம். நாம் பொதுவெளியில் கூட்டணி குறித்து அமைதி காப்பது. காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு இளக்காரமாகவும், ஏளனமாகவும் தெரிகிறது.1996 தேர்தலில் மக்களுக்கும், மக்களின் மனநிலைக்கும் எதிராகத்தான் காங்கிரஸ் கட்சி கூட்டணி விஷயத்தில் முடிவெடுத்தது. அதற்கான பலனை காங்கிரஸ் கட்சி அன்று அனுபவித்தது. அதேபோல் 2026லும் அவர்களின் செயல்பாடுகள் மக்களின் மனநிலைக்கு எதிராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சரி அவர்கள் என்ன நிலைப்பாடு வேண்டுமானாலும் எடுக்கட்டும் அது அவர்களின் சுதந்திரம். அதற்காக தவெகவை காரணம் காட்டி திமுகவிடம் பேரம் பேசுவது என்பது தமிழக வெற்றிக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு ஏற்புடையதல்ல.

தளபதி விஜய் அவர்களின் அமைதியையும்,பெருந்தன்மையையும் சிலர் மலிவாக எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதால் தொண்டர்களாகிய நாம் காங்கிரஸ் கட்சியை நாம் ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம். 234 தொகுதியிலும் போட்டியிட்டு பெரும்பான்மை பெறக்கூடிய தகுதியுடைய கட்சி நம்முடைய கட்சி. ஆகவே யாரை நம்பியும் கூட்டணிக்கு காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு இல்லை. நம்முடைய தலைவர் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். அதனால் தான் அவர் யாரையும் உதாசீனப்படுத்தாமல் எல்லோரையும் மதிக்கும்படி பல அவதூறுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறார். யார் மனதும் புண்படாத வகையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற பண்பின் அடிப்படையிலும் கூட்டணி குறித்து அமைதி காக்கிறார். அது அவரின் மேலான பண்பை காட்டுகிறது.

ஆகவே இனிவரும் காலங்களில் பிற கட்சிகள் நம்முடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் நாம் 100% வெற்றி பெறுவோம். தலைவர் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் 2026ல் அமர்வார் என்பது திண்ணம். ஆகவே யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்ளட்டும். நாம் ஒரு புது வியூகத்தை வரும் தேர்தலில் அமைத்து வெற்றி பெறுவோம். அந்த தெம்பும், திராணியும் நமக்கு மழையென உண்டு. நம்முடன் கோடிக்கணக்கான இளைஞர்கள்,பெண்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆகவே கான்ஃபிடன்ட்டா இருங்க மக்களே! வெற்றி நிச்சயம்.

நாளை நமதே! களம் நமதே! 2026ம் நமதே!

நன்றி வணக்கம்

பிரான்சிஸ் ஃப்ரெடி டி’க்ருஸ்

( தமிழக வெற்றிக் கழகம்)

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – T.V.K Vs D.M.K- அரசியல் கட்டுரை – பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 சட்டமன்றத் தேர்தல்  T.V.K Vs D.M.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது