“ஜல்லிக்கட்டு காளை” – விஜய்யின் குரலில் குட்டி ஸ்டோரி

ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிப்போமா? Available on Audio Format
ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜாயிண்ட் ஆவுற மாதிரி ஒரு ஜங்ஷன். ஒரு பிஸியான ஏரியா. ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கக்கூடிய ஒரு ஏரியா. அங்க சென்டர்ல ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஒன்னு நின்னுட்டு இருக்கு. கால்ல மண்ணை வீசிக்கிட்டு சீறிகிட்டு அப்படியே நின்னுட்டு இருக்குது. யாருமே பக்கத்துல போக முடியல. அந்த இடம் ஒரு கேசுவலா மாறணும் அப்படின்னா அந்தக் காளைய அடக்கி அமைதியாக்குனா தான் மறுபடியும் ஒரு பேக் டு நார்மல் சிச்சுவேஷனுக்கு அந்த இடம் மாறும்.
அந்த ஊர்ல இருக்கிற ஒரு சில பேருக்கு மட்டும்தான் அந்தக் காளை அடங்கும். அவங்க யாருமே அங்க இல்ல. ஆனா அந்தக் கிரவுட்ல இருந்த ஒரு சில பேர் ஆல்ரெடி அந்தக் காளைய அடக்கணும். அடக்கணும்ங்களோட இருந்த ஒரு சில பேர் எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்க பாக்காத காளையா? நாங்க பாக்காத மாடா? நாங்க போயி அடக்குறோம்னு சொல்லிட்டு உள்ள போறாங்க. ஒருத்தராலயும் அந்தக் காளையை தொடக்கூட முடியல. எல்லாரையும் அடிச்சு வீசி தூக்கி போட்டுருச்சு. இப்ப என்னடா பண்றது அப்படின்னு பாக்கும்போது
அந்தக் கூட்டத்தை விலக்கிட்டு ஒரு சின்னப் பையன். ஒரு என்ட்ரி ஒன்னு கொடுக்கிறான். உங்களுக்குத் தான் தெரியும் இல்ல. டேய் எங்களால முடியல. நீ எல்லாம் என்னத்தை போயி கிழிக்கப்போற. எங்களுக்கு அவ்ளோ அனுபவம் இருக்குது. நாங்களே அடிபட்டு ஓரமா படுத்துக் கிடக்கிறோம். இவன் விளையாட்டுத்தனமா எதோ பண்ணிட்டு கிடக்கிறான். பாவம் அந்தக் காளை கிட்ட போய் அடிபட்டுச் சாவப்போறான். பச்சா பையன் அந்தப் பையன். இந்தப் பையன் அண்டர் எஸ்டிமேட் பண்றது ஏளனமா பேசுறது. இப்படி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பரிதாபப்பட்டு. ஐயோ பாவமே! இப்படி தனியா போயி மாட்டிக்கிட்டான். அந்தக் காளை கிட்ட என்ன பண்ணப்போறானோ அப்படின்னு ஒரு பக்கம் பரிதாபப்பட்டு பேசுறாங்க.
அந்தச் சின்னப் பையன் எதுவுமே காதுலே போட்டுக்காம ரெண்டு பாக்கெட்ல கையை விட்டுக்கிட்டு ஸ்டைலா கெத்தா தில்லா அப்படியே உள்ள போறான். ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான். அந்தக் காளை அப்படியே சீறிக் கிட்டு நின்னுட்டு இருக்குது. இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான். காளை அப்படியே சீறிக் கிட்டு முன்னாடி வருது. மக்கள் எல்லாரும் பதட்டத்தோட பாத்துட்டு இருக்காங்க. இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான். காளை அப்படியே முட்ட வரும்போது பாக்கெட் உள்ள மறைச்சு வச்சிருந்த ரெண்டு புல்லுக்கட்டு. அத அந்தக் காளை கிட்ட காட்டுறான். காளை அப்படியே சடனா வந்து நின்னு அது மூடு எல்லாம் மாறி அந்தப் புல்லு கட்டை சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு. அந்தச் சின்னப் பையனும் அந்தக் காளைய அப்படியே தடவிகிட்டு வறான். காளையும் பக்கத்துல ஒரு கொழந்த மாதிரி நடந்து வந்துகிட்டு வருது. பக்கத்துல இருந்த ஒரு வயல்வெளியில் அந்தக் காளை மேய விட்டுட்டு வரான்.
மக்கள் எல்லாரும் அந்தப் பையன ஆச்சரியமா பாக்குறாங்க. அந்த அடிபட்டுக் கிடந்த அந்த அனுபவசாலிங்க தலையைத் தொங்கப்போட்டு நின்னுட்டு இருக்காங்க. ஏன்னா பேசுன பேச்சு அப்படி. வாய் இருக்கின்றதற்காக நக்கலுமா நையாண்டியுமா? நச நச நச நசன். ஒரே பேச்சு. என்ன பண்றது தலையைத் தலையைக் குனிஞ்சு அப்படியே நின்னுட்டு இருக்காங்க. அங்க ஒரு பெரியவர் வராரு. வந்து அந்தப் பையன்கிட்ட கேக்குறாரு. எப்பிடிப்பா இப்படி ஒரு முரட்டு காளை சீறிட்டு நின்னுட்டு இருந்தது. எப்படி அந்தக் காளை அடக்கின அப்படின்னு கேட்டதுக்கு அந்தப் பையன் சொல்றான். அய்யா, எனக்கு அந்தக் காளை பாத்தா கோவமா இருந்த மாதிரி எல்லாம் எனக்குத் தெரியல. அந்தக் காளை பசியோடு இருந்த மாதிரி இருந்தது. அதனால தான் அந்தப் புல்லு கட்டை காமிச்ச உடனே ஓகே. நமக்குத் தேவையானது கிடைச்சுடுச்சு அப்படின்னு உடனே அந்தப் புல்லு கட்டை சாப்பிட்டுட்டு நம்மளோட ஜாலியா வாக்கிங் வந்துருச்சு அப்படின்னு சொன்னான்.
இதைக் கேட்டு அந்தப் பெரியவரு சொன்னாராம். இந்தச் சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் இருக்குறவங்க, அனுபவம் இல்லாதவங்க இதெல்லாம் விஷயமே கிடையாது. யாரா இருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏத்த மாதிரி அந்தச் சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி என்ன பண்ணி அந்தப் பிராப்ளம் சால்வ் பண்றான். எது பண்ணி அந்தப் பிராப்ளம் சால்வ் பண்றான். அது தான் விஷயமே. அது தான் மேட்டரு. சோ, நீ சூப்பர்பா. என்ன பிராப்ளம் வந்தாலும் நீ சால்வ் பண்ணிருவே அப்படின்னு முதுகுல தட்டிக் கொடுத்துட்டு அந்தப் பெரியவரு போறாரு.
இப்ப அந்தக் கதையில அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் நம்ம தமிழ்நாட்டு அரசியல் களம். அந்தப் பெரியவர் தான் நம்ம தமிழக மக்கள். அந்தப் பாக்கட்டுக்குள்ள ஸ்டைலா தில்லா கெத்தா ஒருத்தன் உள்ள வந்தான் பாருங்க. அவன்தான். நான் இல்லங்க நான் இல்ல. நானு நீங்க. நாம எல்லாருமா சேர்ந்து மாபெரும் மக்கள் சக்தியா இருக்கக்கூடிய நம்ம டிவிகே. அது தான் அந்தச் சின்னப் பையன். தேங்க்யூ தேங்க்யூ. தேங்க்யூ. மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாத்தையும் நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்குச் சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமா வந்தது தான் நம்ம டிவி கே. அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை கதை ஏன் சொன்னோம், எதுக்கு சொன்னோம், யார் யாருக்கெல்லாம் சொன்னாங்கறது புரிய வேண்டியவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்
தளபதி விஜய்




