அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY- 1957 INC Vs CPI-அரசியல் கட்டுரை – பகுதி. 4

அரசியல் கட்டுரை – 1952 இல் மைனாரிட்டி கவர்மெண்ட் அமைத்த  காங்கிரஸ் கட்சிக்கு  ஓய்வில் இருந்த ராஜாஜியை கொண்டு வந்து முதல்வர் பதவியில் அமர வைத்தார் காமராஜர். காமராஜருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ராஜாஜியை முதலமைச்சர் ஆக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து இருந்தார். சில நிபந்தனைகளுடன் முதலமைச்சராக ஒப்புக்கொண்டார் ராஜாஜி. காரணம் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் திரும்பவும் மாநிலத்திற்கு  இறங்கி வருவது சற்று குறைவானதாக கருதப்பட்டாலும்  சூழ்நிலை கருதி முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பழுத்த அரசியல்வாதி என்பதால் பலரையும் சரிகட்டி இரண்டரை ஆண்டுகள் பதவியில் நீடித்தார்.

குலக்கல்வித் திட்டம் என்ற திட்டத்தை எப்போது கையில் எடுத்தாரோ அப்போதுதான் இராஜாஜிக்கு சறுக்கல் ஏற்பட ஆரம்பித்தது. அவருடைய பதவியும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதுவரை இராஜாஜியை ஆதரித்து வந்த பெரியார் குலக்கல்வி திட்டத்தால் கடுமையான எதிர்வினை ஆற்றுத் தொடங்கினார்.  அண்ணாவோ  சண்டமாருதம் புரிந்தார். கருணாநிதி கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையின் மையப் புள்ளியில் தான் பிரிந்திருந்த பெரியார், அண்ணா இருவரும் ஒன்றாக சேர்ந்து போராட  ஒரு வாய்ப்பாக அமைந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் கடுமையான போராட்டத்தை முன்னிறுத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தது. காமராஜரும் இந்த திட்டம் கூடாது என்று ராஜாஜியிடம்  சொல்லிப் பார்த்தார். ஆனால் கடைசிவரை ராஜாஜி தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை. இராஜாஜிக்கு ஆதரவாக ம. பொ. சி களமிறங்கினார். ஊர் ஊராக சென்று குலக்கல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் தமிழக மக்களிடம் எதுவும் எடுபடவில்லை.  பிறகு ஏற்பட்ட தீர்மானத்தில் தோல்வியடைந்து தாமாகவே ராஜாஜி பதவி விலக நேரிட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய காமராஜர் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்று தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஆயத்தமானார்.

காமராஜரின் முதல்  அதிரடி செயல்பாடாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரட்டைமலை சீனிவாசனின் பேரனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக்கி ஒரு தரமான சம்பவத்தை செய்து காட்டினார். அதன் பிறகு காமராஜர் தனது அரசியல் சாணக்கியத்  தனத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் தன்னை எதிர்க்கும் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்ற தலைவர்களை  அமைச்சரவையிலேயே தொடர அனுமதித்தார். எதிரிகளை கண்ணுக்கு எதிரிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அதுதான் காமராஜரின் சாதுரியம். தனக்கு எதிராக கட்சியில் சூழ்ச்சி செய்தவர்களை கண்டு அவர் பயப்படவில்லை. மாறாக அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம் எதிரிகள் தொலைவில் இருந்தால் அவர்கள் தனக்கு எதிராக என்ன திட்டமிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாது. அதுவே தன்னுடைய பார்வையிலேயே இருந்து விட்டால் அவர்களை எளிதில் கண்காணித்து விடலாம் என்ற கணிப்புதான் காமராஜரை பெருந்தலைவர் ஆகியது.

இன்றைய அதிமுக அரசியல் சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை எதிர்ப்பவர்களை கண்டு அச்சம் கொள்கிறார். தனக்கு முதல்வர் பதவி கொடுத்த திருமதி சசிகலாவை  கட்சியை  விட்டு தூக்கினார். பிறகு திரு. தினகரனை கட்சியிலிருந்து  வெளியேற்றினார். அடுத்து பிஜேபி ஆதரவால் அதிமுகவில் மீண்டும் இணைந்த திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களை  கட்சியிலிருந்து நீக்கினார். இப்படி தனக்கு எதிரானவர்களால்  தன்னுடைய பதவிக்கு  ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஓரங்கட்ட நினைப்பதே அவரின் பலவீனத்தை வெளிப்படையாக காட்டுகின்றது.  இந்த அச்சத்தின் நிலைப்பாடே இன்றைய அதிமுக பலவீனப்பட்டு கிடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

காமராஜர் எப்படி தன்னை எதிர்ப்பவர்களை விலக்கி வைக்காமல் தன் கூடவே வைத்திருந்தாரோ அதேபோல் அண்ணாவுக்கும்  இது மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. திரு.கருணாநிதி அவர்களுக்கு கணையாழி அனுவித்த பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி ஈ. வி. கே.சம்பத்தால் உருவானது. ஆனால் கடைசிவரை சம்பத் அவர்களை அண்ணா இழக்க விரும்பவில்லை. சம்பத் அவராகத்தான் திமுகவிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டார். ஆனால் திரு. ஈ. பி. எஸ் அவர்களோ பதவியை தக்க வைக்க எதிர்ப்பவர்களையும், கட்சியில் செல்வாக்கு படைத்தவர்களையும் வெளியேற்றுவதுதான் சாணக்கியத்தனம் என்று நம்புகிறார். அது முற்றிலும் தவறான போக்கு. பதவியை தக்கவைக்க வேண்டுமென்றால்  அவர்களை கூடவே வைத்து தனக்கு ஆதரவாளர்களாக மாற்றுவது தான் ஒரு ஆளுமை மிக்க தலைவரோட தன்மை. அது இல்லாமல் விலகி ஓடி மறைவது ஆளுமை திறன் இல்லாதவர் செய்கின்ற செயல் என்றே வரலாறு கூறும். இப்படிப்பட்ட தவறான முடிவுகளால்  தலைமைப் பண்பு கரைந்து போய் காணாமல் போய் விடுவார்கள்  என்பதே  நிதர்சனம். அவர் ஒரு கரிஷ்மாடிக் தலைவராக இல்லாமல் இருப்பதே அவரின் அச்சத்திற்கு  காரணமாக இருக்கக்கூடும்  எனபதே அனைவரின் எண்ணமாக இருக்கலாம். காலம்தான் அதை தீர்மானிக்கும்.

காமராஜர் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து பச்சைத் தமிழன் என்று பெரியார் பாராட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றார். அண்ணாவின் பாராட்டுதலையும் பெற்றார். இதே ஆதரவுடன் 1957 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

1962 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா அதிரடியாக களமாடி எல்லா கட்சிகளையும் பிண்ணுக்குத் தள்ளி எப்படி எதிர்க்கட்சித் தலைவராக வந்தார் என்பதை அடுத்த அரசியல் கட்டுரையில் காண்போம்.
மீண்டும் பயணிப்போம்.

அன்புள்ளம் கொண்ட அறிவார்ந்த வாசகர்களாகிய உங்கள் பேராதரவுக்கு  நன்றிகள். ஒரு சிறிய வேண்டுகோள் இந்த கட்டுரையை பற்றி தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு எங்களின்  பயணத்திற்கு ஒரு ஏணிப்படியாக அமையட்டும்.

நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

2 Comments

  1. PRAKASH

    August 12, 2025

    JUDGEMENT DAY இந்த அரசியல் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடந்தகால அரசியலை புரிந்துகொள்ள.

  2. Chandran t

    August 12, 2025

    Arumai Yana katturai, pls continues

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K – அரசியல் கட்டுரை- பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 தேர்தல்  D.M.K Vs T.V.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது என்பது