மாரீசன்- சினிமா விமர்சனம்


சினிமா விமர்சனம் – நாம இப்ப எந்த படத்தை பத்தி பாக்க போறோம்னா வடிவேலு, பகத் பாஸில் நடிச்ச மாரீசன் படத்தை பத்தி பாக்க போறோம்.
படம் ஓபனிங்லையே பகத் பாசில் ஒரு திருட்டு குற்றத்துக்காக ஜெயிலுக்கு போயிட்டு பாளையங்கோட்டை சிறையிலருந்து வெளியில வராரு. அவரு வெளியில வந்த பிறகு மறுபடியும் சின்ன சின்ன திருட்டா செய்றாரு. அப்படி ஒரு பைக்கை திருடிட்டு ஏதாவது ஒரு வீட்டில் திருடலாம் அப்படின்னு நோட்டம் விட்டுட்டே இருக்குறப்ப ஒரு வீடு தெரியுது. அந்த வீட்ல போயி திருட போறாரு. உள்ளார போய் பார்த்தா வடிவேலு சங்கிளில கட்டி போட்டுபடி உட்கார்ந்து இருக்கிறார். பகத் பாஸில் அவரை பார்த்து ஷாக்காக என்னை எப்படியாவது காப்பாத்துப்பா குமாரு அப்படின்னு வடிவேலு சொல்றாரு. என்னடா நம்மள குமார்னு சொல்றாறே அப்படின்னு பகத் பாசில் முழிக்க, எனக்கு மெமரி லாஸ் வெளில போனா காணா போய்டுவேன்னு பையன் கட்டிப்போட்டுட்டு போய்ட்டான் அப்படின்ற மாதிரி வடிவேலு சொல்றாரு. என்ன இங்கருந்து காப்பாத்துனா உனக்கு ATM ல 25 ஆயிரம் பணம் எடுத்துத் தரேனு டீல் பேச. பகத் பாஸிலோ ஏடிஎம் கூட்டிட்டு போய்ட்டு 25 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிட்டு அப்புடியே திரும்பி போய்டலாம்னு நெனைக்கிறப்ப அவரு அக்கவுண்ட்ல 25 லட்ச ரூபா இருக்கிறத பாத்துறாரு. சரி இந்த 25 லட்ச ரூபாய எப்படியாவது ஆட்டய போடணும்னு அவர் கூடவே பைக்லேயே ட்ராவல் பண்றாரு. இப்படி தான் படம் ஸ்டார்ட் ஆகி பர்ஸ்ட்ஹாப் புல்லா ஸ்லோவா போகுது. இந்த படத்த பாக்குறப்ப சேகுவேராவோட மோட்டார் சைக்கிள் டைரிஸ் படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

இன்டர்வல்ல வடிவேலு ஏதோ ஒரு திட்டத்தோட தான் இந்த மெமரி லாஸ் மாதிரி நடிக்கிறார் அப்படின்னு பகத் தெரிஞ்சுக்கவே பயங்கரமா ஷாக் ஆகுறாரு. அவர் என்ன பண்றாருனு பின் தொடரப்பதான் வடிவேலு ஒரு சீரியல் கில்லர் என்பது தெரியவருது. அதுக்கப்புறம் பகத் பாசில் இந்த சீரியல் கில்லர் வடிவேல் கிட்ட இருந்து தப்பிச்சாரா? இல்லையா? இல்ல வடிவேல் எதுக்காக அந்த கொலைங்கள செய்றார் அப்படின்றதுதான் படத்தோட மீதி கதை.

நடிப்பு அரக்கனு பேசப்படுற பகத் பாசில விட வடிவேலு தான் பர்பாமன்ஸ்ல டாப்ல இருக்காரு. ஒரு இடத்துல அவரோட ஒய்ஃப் சித்தாரா மெமரி லாஸ்ல அவரையே மறக்குற சீன்ல வடிவேலு கண்கலங்கி அழுவார் பாருங்க அந்த இடம் ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி. நம்மளே கண் கலங்க வெக்கிற அளவுக்கு ஒரு பிரில்லியண்டான நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்துல அவர்தான் மெயின் ரோலாக இருக்கிறார். படத்துல மியூசிக் பெருசா ஒண்ணுமே இல்ல. ஒரு சீன்ல இளையராஜாவோட சாங் வரும் அது சம்பந்தமே இல்லாம வரும் பட் இருந்தாலும் அந்த சாங் நமக்கு பயங்கரமா ஒரு ஃபீல் கொடுக்கும். யுவன் சங்கர் ராஜாவுக்கு இளையராஜா கிட்டருந்து காப்பி ரைட் பிரச்சனை வராம இருந்தா சரிதான். இந்த படத்துல முக்கிய பிரச்சனை என்னன்னா வடிவேலு செய்ற கொலைக்கான காரணம் ரொம்ப ஸ்ட்ராங்கா இல்ல. வடிவேலு பர்சனலா பாதிக்கப்பட்டிருந்தாரு அதனால அவர் ரிவேஞ் எடுத்தாரு அப்படின்னு சொல்லி இருந்தா கதைக்கு இன்னும் கொஞ்சம் வலுவா இருந்திருக்கும்.
படம் பாத்துட்டு வெளிய வர்றப்ப மகராசன் படத்துல வர்ற மாதிரியான ஒரு ஹார்ட் ஃபீலிங் நமக்கு வரல. அதுதான் இந்த படத்தோட மிகப்பெரிய மைனஸ். மலையாள திரில்லர் படம் மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க அதுல ஓரளவுக்கு தான் டைரக்டரால ரீச் பண்ண முடியுது. மத்தபடி இதுல பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல அவ்ளோதான். மாரீசன் வடிவேலு வெர்சன்.
- ஃப்ரெடி டிக்ரூஸ் –