சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

இப்ப நாம எந்த படத்தை பத்தி பார்க்க போகிறோம்னா. விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படத்தை  பத்தி பார்க்க போறோம்

இந்த படத்தோட கதை மதுரையில நடக்குது  விஜய் சேதுபதி (ஆகாச வீரன் ) நித்யா மேனன ( பேரரசி) பொண்ணு கேட்டு வராரு. அவரு குடும்பத்தோட ஒரு ஹோட்டல்  வெச்சி நடத்துறாரு. அதுல  அவரு பேமஸான புரோட்டா மாஸ்டரா இருக்கிறார். அத சொல்லி பொண்ணு கேக்குறாரு. ஒரு புரோட்டா மாஸ்டருக்கு  எப்படி பொண்ணு கொடுக்குறதுன்னு நித்யா மேனன் அப்பா அம்மா யோசிக்கிறாங்க. என்ன படிச்சிருக்கார்னு கேக்குறப்ப அவரு டபுள் எம் ஏ   படிச்சிருக்கிறாரு அப்படின்னு  விஜய் சேதுபதி அம்மா தீபா  சொல்றாங்க. அத கேட்ட நித்யா மேனனோட அப்பா அம்மா  கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றாங்க. இரண்டு பேத்துக்கும் கல்யாணம் நடக்குது. ஒரு குழந்தையும் பொறக்குது. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பிரிஞ்சிடுறாங்க.  கருப்பண்ண சாமி கோயில்ல  நித்யா மேனன் குடும்பத்தோட வந்து பொண்ணுக்கு மொத மொட்டை அடிக்கிறாங்க. அத கேள்விப்பட்ட விஜய் சேதுபதி அங்க வந்து தடுக்கிறாரு. ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய பிரச்சன உருவாகுது . அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு அப்படின்றதுதான் இந்த படத்தோட மொத்த கதையும்.

படத்துல விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர் கே சுரேஷ், மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், மைனா நந்தினி, காளி வெங்கட், தீபா, சரவணன் அப்புறம் சின்ன சின்ன கேரக்டரா நிறைய பேர் நடிச்சிருக்காங்க. மொத்த படத்தையும்  ஒரு கருப்பண்ணசாமி கோவில்ல  செட் போட்டு எடுத்துருக்காங்க பிளாஷ் பேக் சீன் மட்டும் அப்பப்ப வெளியே போய்ட்டு வர்றாங்க. விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் நல்லா பர்பாமென்ஸ் பண்ணி இருக்காங்க. ஆனா ரெண்டு பேரும் படம் ஃபுல்லா கத்திகிட்டே இருக்காங்க. அவங்க கத்துறத பார்த்தா நமக்கு தொண்டையே கட்டி போயிருது. அந்த அளவுக்கு படம் ஃபுல்லா சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க. நித்யா மேனன் ஓட அம்மா ஒரு சைடு ஏத்தி விடுறாங்க, விஜய் சேதுபதி அம்மா தீபா ஒரு சைடு ஏத்தி விடுறாங்க ரெண்டு பேருமே ஏத்தி விடுறதில இவங்களோட சண்டை ஓயாம நடக்குது. இதுதான் படம் ஃபுல்லா எடுத்து வெச்சிருக்கார் நம்ம டைரக்டர் பாண்டிராஜ்.

அதாவது ரெண்டு குடும்பமும் பிரியறதுக்கு காரணம் இந்த மாதிரி மாமியார்ங்க  தான் அப்படின்ற மாதிரி படத்த கொண்டு போய் முடிச்சிடுறாரு. சரி படம் பாத்துட்டு மாமியார்கள் திருந்திடுவாங்க அப்படின்னு நினைச்சுட்டு நாம சீட்டை விட்டு எந்திரிச்சா அதுக்கப்புறம் வேற ஒரு கதை சொல்றாரு டைரக்டர். ரெண்டு பேருமே  பிரியறதுக்கு மாமியார் காரணமில்ல  ரெண்டு பேருக்கும் சரியான புரிதல் இல்லை அப்படின்னு சொல்லி ஒரு கதையை சொல்றாரு. இப்ப நாம எந்த கதைய பாலோ பண்றதுனு தெரில.  படத்துல பாத்தா ரெண்டு பேரையும் யங் கப்பிள் மாதிரி தெரில  பழுத்த பழம் மாதிரி இருக்குறாங்க. தொந்தியும் தொப்பையுமா இருக்கேன்னு அவங்களே அவங்கள கலாச்சிக்கிறாங்க. சில நேரத்துல விஜய் சேதுபதி கேரக்டர் ஒரு ஆக்ஷன் கேரக்டரா, இல்ல காமெடி கேரக்டரா , இல்ல லூசு கேரக்டரா அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கு. யோசிச்சு பார்த்தா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அந்த படத்து கேரக்டரோட  இன்னொரு வெர்ஷன் தான் இந்த ஆகாச வீரன் கேரக்டர்.

ரெண்டு குடும்பமும் ரவுடி குடும்பம்னு கதையில சொல்றாங்க ஆனா என்ன ரவுடித்தனம் பண்ணாங்கன்னு ஒரு டீடெயிலும் இல்லை அதே மாதிரி படம் ஃபுல்லா விஜய் சேதுபதிக்கும், ஆர்கே சுரேஷ் கும் ஏதோ ஒரு இடத்துல தகராறு நடந்திருக்கு அது என்ன தகராறுனு நமக்கு ஒரு ஹைப்ப கிரியேட் பண்றாங்க கடைசியில அது என்னன்னு சொல்லாமலே படத்தை  முடிச்சிடுறாங்க. வழக்கம்போல யோகி பாபு திருடன் கேரட்டர்ல காமெடி பண்றாரு  ஒரு திருட்டுகூட அவரு செய்யல. கிளைமேக்ஸ்ல ஒரு செயினை திருடுனதா தூக்கி காட்டுறாரு அவ்வளவு தான் அவரோட திருட்டு. படம் ஃபுல்லா எல்லாரையும் கிரிட்டிசைஸ் பண்ணிக்கிட்டு ஒரு ரன்னிங் கமெண்டரி கொடுத்துட்டே இருக்காரு. ஒரு சில இடத்தில் சிரிப்பு வந்தாலும் பல இடத்துல தெமேனு தான் இருக்க வேண்டியதா இருக்கு.

படத்துல சில இடங்கள்ள எமோஷன்  நல்லா வொர்க் அவுட் ஆகுது  ஆனா படம் ஃபுல்லா அந்த எமோஷன கேரி பண்ண முடியாம பாண்டியராஜ் கோட்டை விட்டுட்டாரு. மியூசிக் ஓகே மொத்தத்தில் இந்த படம் எப்படின்னா எங்ஸ்டர்ஸ்க்கு பிடிக்க வாய்ப்பு இல்ல. ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. ஒருவாட்டி பாக்கலாம் வழக்கமான பழைய டெம்ப்ளேட்டான கதை தான் இந்த தலைவன் தலைவி.

– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா சினிமா விமர்சனம்

மாரீசன்- சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் – நாம இப்ப எந்த படத்தை பத்தி பாக்க போறோம்னா வடிவேலு, பகத் பாஸில் நடிச்ச மாரீசன் படத்தை பத்தி பாக்க போறோம். படம்