சிறுகதைகள் தொடர்

பேனா – The Pen – திரில்லர் தொடர்

திரில்லர் தொடர்- ஓவியம் என்றால்  நமக்கெல்லாம் சற்றென்று ஞாபகத்துக்கு வருவது மோனலிசா என்ற ஓவியம் தான். அந்த மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் யார் என்று கேட்டால் நிறைய பேர் லியானார்டோ டாவின்சி என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அதே போல இன்னொரு புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ அவரைப் பற்றி நிறைய பேர் உலகம் முழுவதும்  தெரிந்து வைத்திருப்பார்கள். 1500 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டாவின்சியையும் 1900 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோவையும். மக்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.

ஆனால் 1853 இல் பிறந்து தன்னுடைய 37 வயதில் 2100 புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்து வறுமையாலும், மனநோயாலும் துன்புற்று இறுதியில் தற்கொலை செய்து கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற ஓவியரான வின்சென்ட் வான்கோவை இந்த உலகம் அந்த காலகட்டத்தில் மதிக்காமல் உதாசீனப்படுத்தி வைத்திருந்தது.
ஆனால் இன்று வான்கோவின் ஓவியங்கள் பல மில்லியன் டாலர்கள் விலை போகின்றன. அந்த அளவுக்கு  உலகப் புகழ்பெற்ற ஓவியராக வான்கோவை மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது கொண்டாடி என்ன ஆகப் போகிறது வாழும் காலத்தில் மதிக்காமல் இறந்த பிறகு மதித்து என்ன பயன். இப்படித்தான் சில நேரங்களில் சில மனிதர்களுக்கும் நடக்கின்றது.

வான்கோவை போல வாழும் காலத்தில் ரவிக்குமார் என்ற ஓவியன் தனது 50 வயது வரை மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு குழந்தைகள் இல்லை மனைவி மட்டுமே துணை. வறுமை அவனை வாட்டிக் கொண்டிருந்தாலும் சிறந்த ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பது தான் அவனுடைய வழக்கமாக இருந்தது. அவன் ஓவியம்  வரைவதற்கான கருவிகளை வாங்குவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டான். ஓவியங்களை விற்று அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தி வந்தான். வான்கோவை போல மனதளவில் பாதிக்கப்பட்டவனாகத்தான் வாழ்ந்து வந்தான். இப்படி வாழ்க்கை சிரமமாக சென்று கொண்டிருக்கையில் அவனுக்கு ஒரு  மரத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று கிடைக்கின்றது. அந்த பேனா மறுமுனையில் தூரிகை அதாவது பிரஸ் ஒன்று இணைக்கப்பட்டு வித்தியாசமாக இருந்தது. சில சமயங்களில் அந்த தூரிகையை வைத்து வரைவான் ஆனால் பேனாவை வைத்து மட்டும் இதுவரை எழுதியதில்லை.

ஒரு நாள் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை வந்தது. இதுபோல சண்டை அவர்கள் இருவருக்கும் அடிக்கடி நிகழக் கூடியது தான். எப்போதெல்லாம்  இருவருக்கும் சண்டை நடக்கிறதோ அப்போதெல்லாம் அவன் நண்பன் பஞ்சாபகேசனை தேடிச் செல்வான் அவனுடைய துக்கத்தை பகிர்ந்து கொள்ள அவனுக்கு கிடைத்த ஒரே நண்பன்  பஞ்சாபகேசன்தான்.  காரல் மார்க்ஸ் பசி, பட்டினியால் வறுமையில் வாடும் போதெல்லாம் ஃப்ரெட்ரிக் ஏங்கிள்ஸ் என்ற  உற்ற நண்பன்  பண உதவி செய்து காத்து வந்தார். அதுபோல அவ்வப்போது  ரவிக்குமாருக்கு பல நேரங்களில் பேருதவையாக இருந்தான் பஞ்சாபகேஷன்.

ஒரு நாள் ரவிக்குமாருக்கும் அவனுடைய மனைவி மரகதத்திற்கும் சண்டை  முற்ற கோபத்தில் ரவிக்குமார் வரைந்த ஓவியங்களையெல்லாம்  தூக்கி எறிகிறாள்.  நீங்க வரைஞ்ச படத்தை வெச்சு என்ன பிரயோஜனம் ஒரு காசுக்கு ப்ரயோஜனம் உண்டா? இந்த சில்லறை காசுக்கா  நாளுபுல்லா வரைஞ்சுட்டுருக்கீங்க இந்த பிச்சை காச வெச்சு எப்புடி வாழ்றது, ஏதாவது வேலைக்கு போலாம்ல  இப்புடி புடிவாதமா படம்  வரைஞ்சுகிட்டே இருந்தா பசி பட்னியால சாக வேண்டியதான்  என்று கத்தி தீர்த்தாள் . ரவிக்குமார் சிதறிய ஓவியங்களை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை விடுவிடு என்று கோபமாக வெளியில் சென்று விடலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடுகிறது. இத்தோடு இவளை தலைமுழுகி விடலாம் என்று ஒரு படி மேலே சென்று சிந்திக்கிறான். என்ன  செய்வதென்றே தெரியாமல் ஓவியங்களை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான். சிதறி கிடந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு ஒரு செய்தியை சொல்வது போல் தோன்றியது.

பல வருடங்களுக்கு முன்பு அவன் வரைந்த ஓவியங்கள். அந்த ஓவியங்களில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்து இருப்பதாக அவனுக்கு தோன்றுகிறது.  கலைந்து கிடந்த ஓவியங்களை பொறுக்குகிறான்.  சில ஓவியங்களை மட்டும் தனியாக எடுத்து வைக்கிறான். தனியாக எடுத்து வைத்த ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்க்க அவனுக்கு அந்த  ஓவியத்திலிருந்து ஏதோ ஒரு செய்தி ஒன்று  புலப்படுகிறது.  2001 செப்டம்பர் 10ல் அவன் வரைந்த ஓவியம் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் என்ற ஓவியம் அதில் அந்த கோபுரம் இருக்கிறது இரண்டு பறவைகள்  மேகக் கூட்டங்களுக்கு இடையே பறந்து செல்வது போல வரைந்து இருக்கிறான். 2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுரம், இரண்டு பயிற்சி விமானங்களை வைத்து தீவிரவாதிகளால்  தாக்கப்படுகிறது. 2004 டிசம்பர் 25 மற்றொரு ஓவியத்தை வரைந்து இருக்கிறான். ஒரு பேரலை ஒரு நகரத்தை மூழ்கடிப்பது போல  ஓவியமாக வரைந்து இருக்கிறான். அந்த ஓவியம் போல 2004 டிசம்பர் 26 இல் சுனாமி என்ற பேரலை பேரழிவு ஏற்படுத்தியதை உணருகிறான். இந்த உண்மைகளை அவன் உணரும்போது சற்றென்று அவன் வழக்கமாக ஓவியம் வரையும் ஸ்டாண்டை திரும்பி பார்க்கிறான். அதைப் பார்த்து அவனுக்கு பயங்கரமான  அதிர்ச்சி.

ஒரு வாரத்திற்கு முன் தன்னை ஓவியமாக வரைந்து தருமாறு பஞ்சாபகேஷன் ரவிக்குமாரிடம் சொல்ல, அவனை தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறான். அந்தப் படத்தை பார்த்தவுடன் அவனுக்கு பேரதிர்ச்சி ஆகிறது. ஐயையோ தவறு செய்து விட்டோமே என் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் அவன் வரைந்த ஓவியங்களை பொறுக்கிக் கொண்டு தலை தெரிக்க பஞ்சாபகேசன் வீட்டை நோக்கி ஓடுகிறான்.
பஞ்சாபகேஷனுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி
அடுத்த தொடரில் காண்போம்….

– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சிறுகதைகள்

குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச
சிறுகதைகள்

கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து