கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 7

கார்த்திக் பேனாவை எடுத்து என்ன  எழுதுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். சுற்றும் மற்றும் பார்த்த பிறகு பேப்பரில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தவன், ஒன்றும் யோசனைக்கு வராமல் கிருக்கலாக கோடுகளை போடுகிறான். பேனா நன்றாக எழுதுகிறது என்று தெரிந்த பிறகு தன்னுடைய பெயரை எழுத வேண்டும் என்று நினைக்கிறான். கார்த்திக் என்று எழுத துவங்கும் பொழுது வீட்டுக்கு வெளியே இருந்து அவனுடைய ஆயாவின் குரல் கேட்கிறது. டேய் கார்த்தி சீக்ரம் வெளில வாடா? ஏன் ஆயா கத்துற! டேய் வானல்லாம் இருட்டுகிட்டு வருது பாரு. மழை வர மாதிரி இருக்குது. வெளிலருக்கிற காய போட்ட துணிலாம் எடுத்து உள்ள வை என்று  கத்துகிறாள். கார்த்திக் பேனாவை வைத்துவிட்டு வெளியே ஓடுகிறான். மேகம் இடி மின்னலுடன்  இருண்டு கிடக்கிறது. சலசலவென்று மின்னல் வெட்ட ஆயா துணிகளை கொடியிலிருந்து வேக வேகமாக எடுத்து கார்த்தியிடம்  கொடுக்க அதை வாங்கிக் கொள்கிறான். என்ன இது திடீர்னு மழை வருது. மெட்ராஸ்ல எப்ப மழை வருது, எப்ப வெயில் அடிக்குதுனு தெரியல? எல்லாமே மாறிப்போச்சு. காலைல சுல்லுன்னு  வெயில் அடிச்சுச்சு இப்ப என்னடானா மழை வருது. என்னதான் இந்த ஊர்ல நடக்குது என்று சலித்துக் கொள்கிறாள். எல்லா துணிகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று வைக்க இடம் தெரியாமல் பேனா இருக்கும் மேஜை மீது துணிகளை போடுகிறான். துணிகளின் அடியில் பேனா சிக்கிக் கொள்ள, சட சடவென்று பெய்த மழை சட்டென்று நின்று போகிறது. மீண்டும் சூரியன் மேகத்திலிருந்து  மெல்ல மெல்ல வெளியே வந்து பிரகாசிக்க தொடங்குகிறது. 

ஆம்புலன்ஸ் ரவிக்குமார் பாடியை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி ஹை ரோட்டில் ஜி ஹெச் நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பூந்தமல்லி சாலையில் எப்பொழுதும் டிராபிக் ஜாம் இருந்து கொண்டே இருக்கும். கோயம்பேட்டில் தொடங்கி ஜிஹெச் வரை குறைந்தது  30 சிக்னலுக்கு மேல் அந்த ரோட்டில் இருக்கும். இவர்கள் செல்லும் நேரத்தில் ஒரு சில சிக்னல்  வேலை செய்யாமல் ரிப்பேர் ஆகி இருந்தது. ஆம்புலன்சின் சைரன் சப்தம் நின்ற இடத்தில் கத்திக்கொண்டே இருக்க வாகனங்கள் வழி விட சற்று தடுமாறிக் கொண்டிருந்தது. எதிர் திசையில் நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் வேகமாக வந்து டிராபிக்கை கிளியர் செய்ய தொடங்கினார். ஆம்புலன்ஸ் வளைந்து வளைந்து முன்னேறியது முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் முன்கூட்டியே சுதாரித்தபடி சைரன் சத்தத்தை கேட்டு வழி விட்டு பாதை அமைத்துக் கொடுக்க இன்னும் வேகம் எடுத்தது ஆம்புலன்ஸ்.

சோசியல் மீடியா வந்த காலகட்டத்திற்கு பிறகு மக்களிடையே நிறைய அவர்னஸ் உருவாகி இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக சாலையில் செல்லும்போது யாராவது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டாலோ அல்லது ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு கீழே விழுந்து கிடந்தாலோ அவர்களை தூக்கி விட உடனே யாரும் ஓடி வர மாட்டார்கள் என்று நகரவாசிகளின் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது தற்போது மாறி இருக்கிறது என்றே கூறலாம். கிராமத்தில் இதே போன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் உடனே அங்கிருக்கிற மொத்த பேரும் ஓடிவந்து உதவி செய்வார்கள். ஆனால் தற்போது நகரப் பகுதியில் பலர்   உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு   ஓடிவந்து உதவி செய்கிறார்கள் என்றால் அது சமூக வலைதளங்களில் வரும் பல பதிவுகளின், காணொளிகளின் தாக்கமாக கூட இருக்கலாமல்லவா. சரி ஏதாவது ஒரு மாற்றம் மக்களிடையே நடந்தால் நல்லது தானே.

கேசன் டிரைவரிடம் தம்பி சைரனை ஆஃப் பண்ணிடுங்க என்றதும். ஏன் சார் அப்பதானே டிராபிக்ல சீக்கிரம் போக முடியும். என்று பதில் கூற, இல்லப்பா நாம எறந்த பாடிய தான கொண்டு போறோம். ஒன்னும் அவசரம் இல்ல. எதுக்கு சைரன் சத்தம் அது என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது என்றதும். சரிங்க சார் என்று டிரைவர் சைரனை ஆஃப் பண்ணுகிறான். இதற்கு முன் சைரம் சத்தம் கேட்டு பதறி அடித்து விலகிய வாகனங்கள் தற்போது இயல்பாக எப்போதும் போல்  வழி விடாமல் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.

கேசனின் மனநிலை தற்போது பதட்டத்திலிருந்து நிதானத்திற்கு வந்திருக்கிறது என்று அந்த சூழல் உணர்த்தியது. தான் ஒரு இயல்பு நிலைக்கு வந்து விட்டோம் என்பதை அவனும் புரிந்து கொண்டான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை அவனுக்கு வர ஒவ்வொரு விஷயமாக அவனுக்கு வரிசையாக புலப்பட ஆரம்பித்தது. டக்கென்று ஃபோனை எடுத்து பார்க்கிறான் டிஸ்ப்ளே உடைந்திருக்கிறது.  அவனுக்கு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. சிம்மை கழட்டி வேறு போனில் போட்டு பேசலாம் என்ற ஐடியா அவனுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. உடனே டிரைவரிடம் தம்பி உன் போன தரியா ஒரு போன் போடணும்  என்று சொல்ல   இந்தாங்க சார் என்று தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து கேசனிடம் நீட்டுகிறான். தம்பி இந்த சிம்ம கழட்டிட்டு என்னோட சிம்ம போட்டு பேசணும் என்றதும் டிரைவருக்கு புரியவில்லை ஏன் சார் அப்படியே பேசுங்க இல்லப்பா எனக்கு யார் நம்பரும் மைண்ட்ல இல்ல டிஸ்ப்ளே ஒடைஞ்சதால நம்பரை பாக்க முடியல போன் வருது ஆனா அட்டென்ட் பண்ண முடியல அதான் ஒன்னோட போனை தந்தா பேசிட்டு திரும்ப சிம்ம கழட்டிட்டு தந்துடுறேன். உனக்கு ஒன்னும் பிரச்சன இல்லயே என்று தன்னுடைய சூழ்நிலையை விளக்குகிறான்.

டிரைவர் யோசித்து விட்டு  அதனாலென்ன சார் பின்னாடி நர்ஸ் இருக்காங்க அவங்க போன் வேணா வாங்கி தரட்டா என்று கேட்கிறான். இல்லப்பா வண்டிய நிப்பாட்ட வேண்டாம். ஒங்க போன தாங்க பேசிட்டு ஒடனே தர்றேன் என்றதும். சரி சார் இந்தாங்க என்று போனை கேசனிடம் கொடுக்க. போனை வாங்கியவன் தன்னுடைய சிம்மை போடுவதற்கு யோசிக்கிறான் அப்போது டிரைவர் தன் இடுப்பில் இருந்த அரைஞாண் கயிரிலிருந்து ஒரு சேப்டி பின்னை எடுத்து கழட்டி,  சார் இத வச்சு குத்துங்க என்று தர பின்னை வாங்கி போனில் குத்தி  அதிலிருந்த சிம்மை எடுத்துவிட்டு தன்னுடைய சிம்மை போடுகிறான் போன் ஸ்விட்ச்  ஆன் செய்த உடனே போன் ரிங் ஆகிறது. ஃபோனை எடுத்துப் பார்க்கிறான் மாவட்ட செயலாளர் ஏழுமலை அவர் கட்சியில் சீனியர்  நிர்வாகி. தலைவரிடமே  நேரில் பேசக்கூடிய செல்வாக்குப் படைத்தவர். மாவட்டத்தில் அவர் வச்சதுதான் சட்டம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரே போனில் வர போனை அட்டென்ட் பண்ணி அண்ணே சொல்லுங்கணே என்று பவ்வியமாக பேச, மறுமுனையில் இருந்த ஏழுமலை ஏம்பா எங்க இருக்க உடனே  கட்சி ஆபீஸ்க்கு வா என்று சொல்ல அண்ணே என்ன விஷயம்னு சொல்லுங்க நா அர்ஜெண்டா ஒரு விஷயமா போயிட்டு இருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமா, சொல்லுங்கனே என்று கேட்க. அப்டியா என்று யோசித்து விட்டு இல்லப்பா தலைவர் தேர்தல் பிரச்சாரத்த ஒடனே தொடங்கணும்னு நினைக்கிறாரு. என்ன அண்ணே எலக்சனுக்கு இன்னும் ஏழெட்டு மாசம் இருக்கு அதுக்குள்ள என்ன  சீக்கிரமா என்று கேட்கிறான் கேசன். நமக்கு எதுக்குப்பா அந்த கேள்விலாம் வேலை சொன்னா செய்யணும் கட்சி, எப்ப முடிவு  பண்ணா நமக்கு என்ன? இப்ப இருக்குற அரசியல் சூழல்ல இப்ப தொடங்கினாதான் நல்லா இருக்கும்னு தலைவர் நெனச்சிருப்பாரு. ஓன் வார்டுல நலத்திட்ட உதவி செய்ற மாதிரி ஒரு ஐடியா இருக்கு. அப்புறம் கூட்டம் போடணும் அதுக்கு உடனே ஏற்பாடு பண்ணனும் அத சொல்லத்தான் கூப்பிட்டேன் அது விஷயமா தெளிவா ஓன்கிட்ட பேசணும் புதுசா பொறுப்பு வாங்கிருக்க வாங்குனதுக்கு தக்க பேர காப்பாத்தனும்பா. 1008 பிரச்சன போயிட்ருக்கு. இந்த நேரத்துல போஸ்டிங் வாங்கி இருக்க வட்டச் செயலாளர்னா சும்மா இல்லப்பா அதுக்கான பலத்த காட்டணும் நீ உடனே வா நேர்ல பேசலாம் என்று கட்டளை பிறப்பிக்க. 

அண்ணே ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டிருச்சு என்று தம்பி பெங்களூரில் ஆக்சிடென்ட் ஆகி இறந்த சம்பவத்தையும் அதற்கு உடனே கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதால் நண்பனை அழைத்துக் கொண்டு பெங்களூர் போகும்போது பங்கில் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகி அவன் இறந்து போனதையும்.  அந்த பாடிய எடுத்துக்கிட்டு ஜிஹெச்க்கு போயிட்டு இருக்கேன் என்ற தற்போதைய சூழலையும் விளக்கிக் கூற, அப்படியாப்பா சரிப்பா  ஏதாவது உதவி வேணும்னா  உடனே எனக்கு போன் பண்ணு. சரி நீ உன் வேலைய பாரு நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு முடிஞ்சா ஆபீஸ்க்கு வந்து தலையை காட்டு அதுக்கப்புறம் என்ன பண்றது நம்ம பேசிக்கலாம் என்று சொல்ல சரிங்கண்ணே நாளைக்கு காலைல வந்துரனே இந்த வேலையை முடிச்சிட்டு வந்துறேன் என்று கூறி போனை துண்டிக்கிறான். கேசனுக்கு அடுத்த பதட்டம் தொத்திக்  கொள்கிறது. பொறுப்பு வாங்கி ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ளார ஏகப்பட்ட பிரஷர் தம்பி வேற இறந்து போயிட்டான், ரவியும் ஆக்சிடன்ட்ல இப்ப இறந்து போயிட்டான் நேரமே சரியில்ல இப்ப பிரச்சாரம் நலத்திட்டம்னு சொல்றாங்க. கூட்டத்தை வேற சேக்கணும். காசு வேற செலவு பண்ணனும். போஸ்டிங்கே பல லட்சம் செலவு பண்ணியாச்சு இப்ப உடனே பணம் பொறட்டுறதுக்கு என்ன பண்றது ஒன்னும் புரியலையே என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தான்.

ஆம்புலன்ஸ் ஜி ஹெச் உள்ளே நுழைகிறது. ரவிக்குமார் பாடியை ஊழியர்கள் ஸ்ட்ரக்சரில் எடுத்து செல்கிறார்கள். கேசன்  போனிலிருந்து தனது வார்டில் உள்ள நிர்வாகி ரமேஷ்க்கு போன் போடுகிறான். ஹலோ ரமேஷ் என்று கேட்க, சொல்லுங்க யார் பேசுறது என்று ரமேஷ் கேட்கிறான் தம்பி நான் தான் கேசன் பேசுறேன் என்று சொல்ல அண்ணே சொல்லுங்கண்ணே என்னணே வேற போன்லருந்து பேசுறீங்க என்று கேட்க. இல்லப்பா அது ஒரு விஷயம் நான் அப்புறம் ஒனக்கு சொல்றேன். இப்ப நான் சொல்ற ஒரு அட்ரஸ நோட் பண்ணிக்க சீக்கிரம் பண்ணுப்பா என்று சொல்ல  ஒரு நிமிஷம் இருங்கண்ணே என்று ஒரு பேப்பரை தேடி எடுக்கிறான் ரமேஷ் எடுத்துவிட்டு அண்ணே இப்ப சொல்லுங்கண்ணே  என்று ரமேஷ் சொல்ல  கேசன் ரவிக்குமாரின் வீட்டு அட்ரஸை சொல்லுகிறான் சொல்லிவிட்டு தம்பி இந்த அட்ரஸ்க்கு போயிட்டு அங்க மரகதம்னு ஒரு அம்மா இருப்பாங்க அவங்க கிட்ட நான் சொல்ற விஷயத்தை சொல்லி அவங்க ஜிஹெச் கூட்டிட்டு வா  என்று சொல்லுகிறான். சரிண்ணே வேற ஏதாவது சொல்லனுமா என்று கேட்க இல்ல இல்ல  நீ ஒன்னும் சொல்ல வேணாம் நீ அங்க போயிட்டு எனக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணு நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன் என்று சொல்ல சரி  சீக்கிரம் போப்பா நான் வெயிட் பண்றேன்  என்று சொல்ல சரினா நான்  ஒடனே கிளம்புறேன்.  நீ ஒரு ஆட்டோ எடுத்துட்டு போ அவங்கள கூட்டிட்டு ஆட்டோலயே அப்படியே ஜிஹெச்க்கு வந்துடு. சரியா அவங்ககிட்ட நீ போய் போன குடு மத்தத நான் பேசிக்கிறேன் என்று சொல்ல சரினா நான் இப்பவே கிளம்பிட்டேன் என்று ஒரு ஆட்டோவை கைதட்டி அழைத்து அந்த ஆட்டோவில் ஏறி புறப்படுகிறான் ரமேஷ்.

கேசன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தபடி நிற்க ஆம்புலன்ஸ் டிரைவர் அருகில் வந்து சார் நான் டூட்டி கட் பண்ணிக்கிறேன் நீங்க வேற ஏதாவது  ஆம்புலன்ஸ புடிச்சிட்டு வீட்டுக்கு கொண்டு போங்க என்று சொல்ல சரிப்பா நீ கிளம்பு என்று கேசன் சொல்ல. டிரைவர் தலையை சொரிந்தபடி நிக்கிறான். சாரிப்பா இந்தா என்று பாக்கெட்டில் இருந்து இரண்டு 500 ரூபாய் தாளை எடுத்து கொடுக்கிறான். அவன் தாங்ஸ்னா என்று வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். என் போன் என்று போனை கேட்க ஓ ஆமாம் ஞாபகமில்ல மறந்துட்டேன். சாரி ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா என்று கேட்கிறான்.  ஒரு கால் வரணும் உடனே பேசிட்டு தார்ரேன் என்று கேசன் சொல்ல சரி சார் நான் வெயிட் பண்றேன்  என்று டிரைவர் சம்மதிக்க. 5நிமிடம் 10,15 நிமிடமாகிறது. டென்ஷனாக உலாவிக் கொண்டிருந்த கேசன் டக்கென்று ஃபோனை போடுகிறான். மறுமனையில் லட்சுமி சொல்லுங்க எங்க இருக்கீங்க என்று கேட்கிறாள் ஜி ஹெச் ல தான் இருக்கேன் பாடிய பார்த்துட்டு இருக்காங்க மரகதம் வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கேன் அது வுடு நீ எப்புடி சேஃபா போயிட்ருக்கியா என்று கவலையோடு கேட்கிறான். எனக்கு ஒன்னும் பிரச்சன இல்லைங்க டோல்ல நிக்றேன் நீங்க கவலப்படாதீங்க ஏதோ கடவுள் நம்மள சோதிக்கிறானு நெனைக்கிறேன்.

எல்லாம் சரியா போயிடும் ஒங்களுக்கு கண்ணு பட்டுருச்சு. இப்பதான் போஸ்டிங் வாங்னீங்க எல்லோரோட வயித்தெரிச்சல், அதான் இப்டி நடக்குது. நாம யாருக்கு என்ன பாவம் பண்ணோம் என்று விசும்ப ஆரம்பித்தாள். ஏய் ஏன் அழுவுற அதெல்லாம் ஒன்னும் நடக்காது நீ தைரியமா இரு. ஒன்ன தனியா அனுப்பிட்டேனு தான் எனக்கு மனசு ஃபுல்லா கஷ்டமா இருக்கு. எனக்கு அந்த நேரத்துல என்ன செய்றதுன்னு தெரில, பொண்டாட்டிய இந்த நெலமையில தனியா அனுப்பிட்டு  மனச போட்டு பிசையுது. நீ பேசாம திரும்பி வந்துடுறியா என்று கேட்க இல்லைங்க பரவாயில்ல. ரொம்ப தூரம் வந்துட்டேன் இப்ப திரும்பி வந்தா நல்லாருக்காது நான் போய் பாத்துகிறேன் அவங்களும் நம்மள எதிர்பாப்பாங்கல்ல என்று சமாதானம் சொன்னாள். அதுவும் சரிதான் லட்சுமி. நீ சொல்றது தான் கரெக்ட். நா சீக்கிரமா கிளம்பி வந்துடுறேன் நீ பத்திரமா போயிட்டு எனக்கு போன் பண்ணு என்று சொல்லும் போது ரமேஷ் போன் செகன்ட் லைனில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்க சரி எனக்கு ஒரு கால் வருது நான் திரும்ப கூப்டுறேன் நீ பத்திரமா போ என்று சொல்லிவிட்டு  காலை கட் பண்ணுகிறான்.

மறுபடியும் ரமேஷ் கால் வர உடனே அதை அட்டென்ட் பண்ணி ரமேஷ்  சொல்லுப்பா என்ற தும் மறுமுனையில் அண்ணா நான் மரகதம் பேசுறேன் என்று சொல்ல, என்னம்மா சொல்லுமா என்றதும். அண்ணே என்னாச்சுணே எதுக்கு ஆள் அனுப்ச்சுருக்கீங்க என்ன பிரச்சனை என்று கேட்க ஒன்னும் இல்லம்மா ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் ஜிஹெச்ல இருக்கேன் யாருக்கு என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சா? இல்லமா எனக்கெல்லாம் ஒன்னும் ஆகல  ரவிக்குமாருக்கு தான் அடிபட்ருக்கு. எங்க  அடி பட்டுச்சுன்னா? எப்படிண்ணா? அவர் இப்ப எப்படிருக்காரு? அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ மொத கிளம்பி வா நீ ஒன்னும் கவலைப் படாத ஜிஹெச் ல இருக்கேன் அந்த தம்பி கூடவே ஆட்டோல  வந்துரு நீ ஒன்னும் குழப்பிக்காத தைரியமா வா நான் பாத்துக்குறேன் பயப்படுற மாதிரி எதுவும் இல்லைலணா என்று அவள் அழ ஆரம்பிக்கிறாள். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ அழாத நீ வா நான் சொல்றேன்ல நீ தைரியமாக கிளம்பி வா என்று சொல்ல சரிண்ணே நான் உடனே கிளம்புறேன் என்று போனை ரமேஷிடம் கொடுக்க அண்ணே இத கிளம்பிட்டேன் என்று ரமேஷ் சொல்ல, சரிப்பா சீக்கிரம் ஆட்டோல  கூட்டிட்டு வேகமா ஜிஹெச்க்கு வா நீ எதுவும் பேசிக்காத நேர அந்த மார்ச்சூரி இருக்குற எடத்துக்கு வந்துருங்க.  அப்புறம் ஒரு நிமிஷம் உன்கிட்ட ஏதாவது ரெண்டு போன் வச்சிருக்கியா என்று கேசன் கேட்க ஆங் இருக்குணே ரெண்டு போன் வச்சிருக்கேன். சரி சரி அந்த போன எடுத்துட்டு வா ஒரு வேலை இருக்கு என்று சொல்ல சரிங்கண்ணே என்று  பேசி முடித்து போனை ஆஃப் பண்ணுகிறான். வாங்கம்மா  போலாம் என்று மரகதத்தை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஜிஹெச் நோக்கி வேகமாக புறப்பட்டு வருகிறான் ரமேஷ்.

போனிலிருந்து சிம் கார்டை கழட்டி வைத்துக் கொண்டு போனை டிரைவரிடம் கொடுக்க அவனும் வாங்கிக் கொண்டு ஓகே சார் தேங்க்ஸ் சார் நான் கிளம்புறேன் ஓகே பா ரொம்ப நன்றிப்பா என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறான் அப்போது மார்ச்சூரியிலிருந்து ஒரு ஊழியர் கேசனை நோக்கி கத்துகிறார். சீக்கிரம் வாங்க என்று கத்த என்ன ஏது என்று புரியாமல் பயந்தபடி வேகமாக மார்ச்சுவரி நோக்கி ஓடுகிறான் கேசன்.

ஜி ஹெச்சில் என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் காண்போம்…..
மீண்டும் பயணிப்போம்…..

நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கதைகள் சிறுகதை

குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச
கதைகள் சிறுகதை

கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து