இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி ! வேற மாறி! வரலாற்றுத் தொடர் – பகுதி. 5

முருகனோட கதைய சொல்லி முடித்த பிறகு கபிலர வேள்பாரிய சந்திக்க  கூட்டிட்டு போறாங்க. வழியில அவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்குது. காடுகளை பத்தி, பறவைகளை பத்தி கத்துக்க இவ்ளோ விஷயங்கள் இருக்குதா அப்படின்ற மாதிரி ரொம்ப வியப்புலா இருந்தாரு. அவரு தன்னை ஒரு ஸ்டூடென்ட் அளவுக்கு நினைக்கத் தொடங்கினார். கொற்றவைக் கூத்த பாக்குறதுக்கு பறம்பு மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சாங்க. கபிலர்  நீலன பார்த்து  ஏன் மக்கள் எல்லாம் இவ்வளவு கூட்டம் கூட்டமா வந்துட்டு இருக்காங்க எதுக்காக மலைய நோக்கி இவ்வளவு பேர் போயிட்டு இருக்காங்கன்னு கேக்குறார். இவங்க எல்லாம் கொற்றவை கூத்த பாக்குறதுக்காக வந்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்ல, கொற்றவை கூத்தா அப்படின்னா என்னனு கபிலர் கேக்குறாரு.

நீலனுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு அப்ப நீங்க கொற்றவைக் கூத்த பாக்க வரலையா, அது ரொம்ப விசேஷமான ஒரு திருவிழா  நாலு வருஷத்துக்கு ஒரு முறை இந்த கொற்றவைக் கூத்து நடக்கும். அது பார்க்கிறது ரொம்ப அற்புதமான அனுபவமா இருக்கும். அது எவ்வியூர்ல நடக்கிற ஒரு அழகான, பெருமையான, அற்புதமான திருவிழா அதை பாக்குறதுக்கு தான் அவ்வளவு மக்களும் இங்க கூடுவாங்க. அந்தக் கொற்றவை கூத்தின் இறுதி கட்டம் தான் ரொம்ப சிறப்பா இருக்கும் அது அப்படியே மெய்சிலிர்க்க வைக்கும் அப்படின்னு நீலன்  பீடிகை போட இந்த மலையில எவ்வளவு விஷயம் கொட்டிக் கெடக்கு அப்படின்னு ரொம்ப ஆச்சரியப்பட்டார் கபிலர்.  இந்த கொற்றவை கூத்த கண்டிப்பா நாம பார்த்தே ஆகணும்னு சொல்லி ஆவலோடு காத்திருக்கிறார் கபிலர். அப்புறம் பழையன அறிமுகப்படுத்தினான்  நீலன். எல்லாரும் கூல் கொடுத்தாங்க, விஷம் முறிவு கசாயத்தை குடிச்சாரு. இப்படி பல ஆயத்தங்களை செஞ்சுக்கிட்டு 400க்கும் மேற்பட்ட ஊர்களைக் கொண்ட பரம்பு நாட்டோட தலைநகரான எவ்வியூருக்கு நீலனோட கிளம்பினார் கபிலர். வேள்பாரிய பாக்கணும்னு ஆவல் இருந்தது. இப்போ கொற்றவைக் கூத்தையும் பாக்கணும்ன்ற ஆவல் இன்னும் அவருக்கு அதிகமாயிடுச்சு. அதே சிந்தனையிலேயே அவர் அப்படியே மூழ்க ஆரம்பிச்சிட்டாரு.

எல்லோரும் புலிவால் குகைக்கு வந்து சேர்ராங்க. கொற்றவை கூத்த பாக்குறதுக்கு பல ஊர்ல இருந்து அங்க நிறைய பேரு வந்து சேர்ந்துட்டே இருக்காங்க. ரெண்டு பகல் ஒரு இரவு பயணம் பெரும் அசதி கபிலருக்கு. வர வழியில சில பிரச்சனைகள், உடல்ல காயங்கள் எல்லாம் ஏற்பட்டுச்சு அந்த வலியினால் நைட்டு  படுத்தா போதும்ன்ற  நிலைமைக்கு அவர் வந்துட்டாரு. அவ்ளோ உடல் சோர்வு. இரவு ஆயிடுச்சு குகையில  போய் படுக்குறாரு. அப்ப அந்த ஊர் பழையனோடயும்,  நீலனோடையும் கூழையன் என்ற ஒரு புத்திசாலியான, வீரம் நிறைந்த எல்லை காவலன் வந்து சேர்றான். அவன் பழையனிடமும், நீலனிடமும் ரகசியமா பேசுறான். அவன் பேசுறது கபிலர் காதுல லைட்டா கேக்குது. அவர் இவங்க பேசுறத  கேட்டுகிட்டே தூங்கிடுறாரு.

அவங்க என்ன பேசுறாங்கன்னா மூவேந்தர்கள் பரம்பு மலைய நோக்கி ஒரு பெரிய திட்டத்தை தீட்டிட்டு இருக்காங்க. நம்ம காடுகள்ள நிறைய ஒற்றர்கள் வந்து உளவிட்டு இருக்காங்க. எதிரிகள்  நம்மள சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு அச்சம் இருக்கு. எந்த நேரத்திலும் எது வேணாலும் நடக்கலாம். புதுசு புதுசா ஆளுங்க எல்லாம் கொற்றவை கூத்த பாக்குறதுக்கு வந்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாம் இதுவரைக்கும் நாம பார்த்ததில்லை. இந்த முறை புதுசான மனிதர்கள நம்ம காடுகள்ள சுத்தி திரியிறத பார்க்க முடியுது. இது ஒரு அவசர நிலையை நமக்கு உணர்த்துது. இந்த நேரத்துல இவரை நீங்க பறம்பு மலைக்கு கூட்டிட்டு வந்தது பெரிய தப்பு. அவர் என்ன நோக்கத்துக்கு இந்த மலைக்கு வந்திருக்கிறார்னு தெரியல. ஏன்னா இவ்ளோ பிரச்சனை இருக்குது. அதை எல்லாம் கடந்து தன்னந்தனி ஆளா இந்த மலைக்கு வந்துருக்காருன்னா ஏதோ ஒரு உள்நோக்கம் இல்லாமலா அவர் வருவாரு. இதுல இந்த மூவேந்தர்களோட சதி இருக்கிறதா தான் நான் பார்க்கிறேன். இது சரியான அணுகுமுறை இல்ல அப்படின்னு சொல்லி வருத்தப்படுறாரு. சரி நடந்தது நடந்துருச்சு நாளைக்கு விடிஞ்சதுக்கப்புறம் அவர்டே நாம கேட்ற்லாம் அப்படின்னு பழையன் சொல்றான். நீலனோ ஆமா நாளைக்கு அத பத்தி கேட்டுடலாம்னு  சொல்லிட்டு எல்லாரும் கலைந்து போயிடறாங்க.

விடியற் காலைல குகைக்குள்ளாற சூரிய வெளிச்சம்  மங்களா தெரிய ஆரம்பிக்கிது. இரவு முழுக்க அசதியில படுத்த கபிலர் அப்படியே கொஞ்சமா கண்ண திறந்து பார்க்கிறாரு. அவருக்கு இன்னும் தூக்கம் கலையல. அவ்ளோ அசதி. இருந்தாலும் வெளிச்சம் அவர் மேல படுறப்ப அந்த உணர்வில் அவர் அப்படியே எந்திரிக்க ஆரம்பிக்கிறாரு.  எதிரே ஒரு உருவம் நிக்குது. முகம் தெரியல அந்த உருவத்துக்கு முதுகு பின்னாடி சூரிய வெளிச்சம் பட்டு அப்படியே பிரகாசமா ஜொலிக்குது. அந்த உருவம் நேரா இவரை நோக்கி வர அந்த உருவத்துக்கு  பின்னாடி மக்கள் எல்லாம் கூடி நிக்கிறாங்க.  யார் என்னன்னு தெரியல. அவர் ஒரு மாதிரி ஷாக் ஆகி யோசனையோட  பாக்கிறாரு. அந்த உருவம் பக்கத்துல வர வர முகம் தெளிவா தெரியுது. இந்த முகத்த  இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆனா யாருன்னு  தெரியல. அவர் பக்கத்துல வந்து நின்ன  உடனே நீங்க யார் அப்படின்னு கேட்கிறார் கபிலர். அவர் அப்படியே கபிலர பார்த்துட்டு நிக்கிறாரு.  எந்த பதிலும் வரல. கபிலர் அப்படியே உத்து பாத்துட்டே இருக்காரு. “வேள்பாரி” அப்படின்னு சொன்ன உடனே கபிலருக்கு பயங்கரமான மகிழ்ச்சி. வேள்பாரிய நேர்ல முதல் முறையா சந்திக்கிறார். எதிரில் நிற்கிறப்ப அவருக்கு என்ன பேசறதுன்னு தெரியல. அப்படியே அமைதியா இருக்காரு பாரிக்கு கபிலரை பார்த்து மகிழ்ச்சி. சந்தோஷத்துல மிதக்கிறான். 

பல மன்னர்கள் கபிலர் நம்ம ஊர்ல கால் வைக்க மாட்டாரான்னு ஏங்கிக்கிட்டு இருக்குற சமயத்துல நம்மள தேடி இவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கிறார் என்ற பெரிய சந்தோஷம் அவன் மனசுக்குள்ள அப்படியே பீறிட்டு வருது. உங்களை நான் என் தோள்ல சுமந்துட்டு போலாமானு  கேக்க, அப்படியே கபிலர் ஷாக் ஆயிடறாரு. அங்க இருக்குற மக்கள் எல்லாம் அப்படியே மிரண்டுறாங்க. ஏன்னா அவங்களோட ஆதர்சனமான ஹீரோ  வேள்பாரிய  இந்த உலகமே அவனுடைய கருணையப் பத்தி சிலாகிச்சி பேசிட்டு இருக்காங்க. அப்படி ஒரு பேராற்றல் பெற்ற வீரன் கபிலர தன்னோட தோள்ல சுமந்துட்டு போலாமான்னு கேக்குறாரு. இத பார்த்தவுடனே அவங்க கண்ணுல்லாம் தண்ணி வந்துருச்சு. பாரியே இப்படி ஒருத்தர பார்த்து கேக்குறான்னா அப்போ அந்த கபிலர் எப்பேர்பட்டவர் அப்படின்னு சொல்லி பிரமிக்கிறாங்க. இதுவரை ஒரு சாதாரண மனிதர்னு நினைச்சுக்கிட்டு இருந்த கபிலர கொண்டாட ஆரம்பிக்கிறாங்க.  கபிலரால நம்பவே முடியல நம்மள இப்படி நேசிக்கிறாங்களா நம்மளை இப்படி கொண்டாடுறாங்களா? இப்பேற்பட்ட மக்களா? உலகமே கருணை உள்ளம் கொண்ட மாமனிதன் அப்படின்னு போற்றக்கூடிய ஒரு நிலத்தின் தலைவன் நம்மள இப்படி கொண்டாடுறானே. அப்படின்னு சொல்லி அவர்  ஸ்தம்பிச்சு போய் நிக்கிறாரு.

அப்படியே  கபிலர தோள்ல  சுமந்துகிட்டு  எவ்வியூருக்கு கூட்டிட்டு போறான். வழி நெடுக மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் கூடவே போறாங்க. எவ்வியூரில் கொற்றவை கூத்தைப் போல கபிலர் வந்தது  திருவிழாவா மாறிடுச்சு. கொற்றவை கூத்து நடக்குறதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு அதுக்கு முன்னாடி இன்னைலருந்து கபிலரோட திருவிழாவா அந்த  எவ்வியூரே மாறிடுச்சு. அப்படி ஒரு  மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிட்ருக்கு. கபிலருக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அந்த அளவுக்கு திகைப்புல அதிர்ச்சியில அவர் மூழ்கிட்டாரு.

கபிலர் நம்மைத் தேடி வந்திருக்கிறார். கபிலருக்கு  இதுவரை யாருமே கொடுக்காத ஒரு விருந்த  கொடுக்கணும். அப்படின்னு  சொன்ன உடனே ஆளாளுக்கு குழு, குழுவா சேர்ந்து விருந்துக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குறாங்க. கபிலரால இவர்களுடைய அன்பு புரிஞ்சுக்கவே முடியல. இவ்வளவு பெரிய அன்பையா நம்ம மேல இவங்க வச்சிருக்காங்க. இப்பேற்பட்ட பாரியவா நாம குறைவா மதிப்பிட்டு விட்டோம் அப்படின்னு சொல்லி வெக்கி தலை குனிகிறார்.  இதுக்கு பரிகாரமா நாம யார்கிட்டயாவது  மன்னிப்பு கேட்டே ஆகணும். இல்ல வேற யார்கிட்டயாவது இத பத்தி பேசி ஆகணும்னு சொல்லி எல்லார்கிட்டயும் பேச ட்ரை பண்றாரு. பாரியும் அவர் சொல்றத கேக்குற நிலமைல  இல்ல. நீலனும், பழையனும், கூழையனும்  யாருமே அவர் சொல்றத கேட்பதற்கு தயாராகவே இல்லை. ஏன்னா கபிலருக்கு விருந்து வைக்கணும் அது மட்டும் தான் அவங்களோட சிந்தனையில இருக்கு.

அந்த விருந்துல என்ன ஒரு சிறப்பு இருக்குன்னா. ஒரு விசேஷமான கறிய சமைத்து போடுவாங்க. அந்த கறி  விருந்துலயே மிகவும் பிரசித்து பெற்ற ஒரு உணவு. அது அறுபதாங்கோழி அப்படின்ற ஒரு பறவையின் கறி. அந்த அறுபதாங்கோழின்றது உடல்  கோழி மாதிரி இருக்கும். வால் சேவல் மாதிரி இருக்கும். அந்த கோழியோட ஸ்பெஷல் என்னன்னா 60 நாளைக்கு ஒருமுறைதான் அது முட்டை போடும். அந்த முட்டைய மண்ணுக்குள்ள புதைத்து தான் அடைகாக்கும் ஏன்னா அந்த முட்டை ரொம்ப ஸ்பெஷலானது. அதுல ஒரு ஸ்மெல் வரும். அந்த ஸ்மெல் காடு முழுக்க அடிக்கும்.  அந்த முட்டைய சாப்பிடுறதுக்கு புலி தேடி வரும். மானைக் கண்டாலே புலி வேட்டையாடும்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு புலி தன் கண்ணு முன்னாடி மான் போவுறத பாத்துட்டு  அமைதியா வேட்டையாடாம வேடிக்கை பார்த்ததுன்னா அந்த இடத்துல அறுபதாங்கோழியோட முட்டை இருக்குனு அர்த்தம். அந்த அளவுக்கு மானை விட அந்த அறுபதாங்கோழியோட முட்டை அவ்வளவு டேஸ்டா இருக்கும். அது கிடைக்கிறது அபூர்வம்.

அன்னப்பறவை  சாகுறப்ப ஒரு பயங்கரமான சத்தத்தை கொடுத்துட்டு சாகும். அதே மாதிரி அறுபதாங்கோழியும் சாகுறப்ப ஒரு பெரிய சத்தத்தை கொடுத்துட்டு தான் சாகும். அப்படி ஒரு அற்புதமான கோழி. சரி இவ்வளவு ஸ்பெஷல் இருக்கிற கோழிய நம்ம இதுவரைக்கும் பார்த்திருக்கோமா அப்படின்னா கண்டிப்பா நாம  எல்லாரும் பார்த்திருப்போம். எங்க பாத்துக்கோம்னு ஆச்சரியமா இருக்கா!   நான் சொன்ன உடனே கண்டிப்பா கூகுள்ல போய் சர்ச் பண்ணி தேடுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அது முருகனோட கொடியில இருக்கிற கோழி தான் அறுபதாங்கோழி. அந்த கோழி அவ்வளவு விசேஷமான கோழி. அது பாக்குறதுக்கு ரொம்ப சின்னதா தான் இருக்கும் ஆனா அது ரொம்பவும் சுவை மிகுந்தது. அதை தான்  கபிலருக்கு விருந்தா வெக்கணும்னு பாரி ஆசப்படுறான். அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அத நிலத்திலலாம் பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு பொந்து குள்ளாறதான் இருக்கும். அந்த கோழிய வேட்டையாடுவது ரொம்ப சிரமம். புலியால் கூட வேட்டையாட முடியாது. அந்த அளவுக்கு பாஸ்டா இருக்கும். அப்பேர்பட்ட அறுபதாங்கோழி மனிதர்கள் கையில சிக்குமா? ஆனா அந்த கோழியை எப்படியாவது விருந்து வைக்கணும்னு சொல்லி ஒவ்வொரு குழு தேடி ஓடுகிறார்கள்.

நான் பர்ஸ்ட் படிக்கணும், நான் பர்ஸ்ட் படிக்கணும்னு சொல்லி யாராவது ஒருத்தர் ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள் இல்ல நாளு நாளா தேடுறாங்க. நாலாவது நாலு அந்த அறுபதாம் கோழி கிடைக்குது. அது பாரியோட கையில தான் கிடைக்குது. பாரி மகிழ்ந்து போறான். ஆஹா என் கையில அறுபதாங்கோழி கிடைச்சிருச்சு. சின்ன குழந்தைங்க மிட்டாய்க்கு அடம் பிடிக்கிற மாதிரி  காடு முழுக்க தேடி அலையற வேள்பாரி கடைசில வெற்றியும் பெற்றிட அந்த கோழியை விருந்து வைத்து கபிலரை உபசரிக்கிறான்.

கபிலருக்கு விருந்து வைத்தது ராஜ உபச்சாரம் செய்த பிறகு அடுத்த கொற்றவை கூத்து விழாவுக்கு தயாராகிக்கொண்டிருந்தது பறம்பு நாடு. அடுத்து நடக்கும் சிறப்பான சம்பவத்தை அடுத்த பகுதியில் காண்போம்….

மீண்டும் பயணிப்போம்….

நன்றி வணக்கம்  

ஃப்ரெடி டி’குரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி…! வேறமாறி…!

ஒரு வரலாற்று நாவலின் கதை…… வரலாற்று நாவல் – மதுரை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற வேள்பாரி
இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி….!வேற மாறி…..! Episode:2

வரலாற்று நாவலின் கதை இந்த எபிசோடிலிருந்து வாசகர்களாகிய உங்களிடம் நேரில் உரையாடுவது போல இந்த கதையை சொல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது அதன்படி