வேள்பாரி….!வேற மாறி…..! Episode:2

வரலாற்று நாவலின் கதை

இந்த எபிசோடிலிருந்து வாசகர்களாகிய உங்களிடம் நேரில் உரையாடுவது போல இந்த கதையை சொல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது அதன்படி இந்த வரலாற்று நாவலை ஒரு உரையாடலாக உங்களுக்கு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். வாருங்கள் நம் நவயுக நாயகன் வேள்பாரியை சந்திப்போம்.
Episode : 2
வேட்டுவன் பாறைன்ற இடத்துலருந்துதான் பாரியோட பறம்பு நாட்டுக்கு போக முடியும். முன்னாடி ரெண்டு குன்றுகள் இருக்கு. அதுக்கு பின்னாடி மலைத்தொடர்களாக இருக்கு. அந்த மலைத்தொடருக்கு மேல தான் எவ்வியூர். அதுதான் வேள்பாரியின் பறம்பு நாடு. கபிலருக்கு இந்த மலைத்தொடரை பார்த்த உடனே மலைப்பாய் இருந்தது. இதுல எப்படிடா ஏறி போக போறோம்னு யோசிச்சுக்கிட்டே இருக்குறப்ப அவரு முன்னாடி ஒரு இளைஞன் கையில வேல் கம்போட மான் மாதிரி துள்ளி குதிச்சி பாறையில் ஏறி போயிட்டே இருக்கான். இவரு அவன நிப்பாட்டி அவன்கிட்ட வழி கேட்கலாம்னு நினைக்கிறதுகுள்ளார அவன் வேக வேகமா ஏறி மேல போயிட்டேருப்பான். இவனை எப்படிடா நிப்பாட்றதுனு கபிலர் யோசிச்சுகிட்டே இருக்கிறப்ப அவனா திரும்பி பாக்குறான். பாத்துட்டு நீங்க யாருன்னு கேட்க.

நான் தான் கபிலர். பேர கேட்கல நீங்க யாருன்னு கேட்டேன். உடனே கபிலர் டக்குனு சுதாரிச்சுட்டு நான் புலவன். புலவன்னா இந்த மன்னர்களை புகழ்ந்து பாடிட்டு பரிசு வாங்குறது, கவிதை எழுதுறது அந்த மாதிரி பாணர்களா அப்படின்னு கேட்கிறான். நான் அந்த மாதிரி புலவன் இல்ல கல்வி அறிவு கொடுக்குற புலவர்னு சொல்ல அவன் அதை கேட்டுட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான். கபிலர் என்னடா கேட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டே இருக்கான். சரி இவன விட்டா புடிக்க முடியாதுனு நினைச்சுக்கிட்டு உன் பேர் என்னன்னு கேக்குறாரு. என் பேரு நீலன் அப்படின்றான். இவருக்கு ஒரு டவுட்டு இவன பாத்தா கம்பீரமா உடல் வனப்போட ஒரு போர் வீரன் மாதிரி இருக்கிறானே சாதாரண ஆள் மாதிரி தெரியலையே அப்படின்னு பேச்சு கொடுத்துக்கிட்டு அவன் கூடவே போறாரு.
வழி நெடுக ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போறாங்க. அப்படி போறப்ப அவன் கேட்கிற பல கேள்விகளுக்கு கபிலராலா பதில் சொல்லவே முடியல. அந்தளவுக்கு மலையை பற்றியும், மரங்களைப் பற்றியும், விலங்குகளை பற்றியும் அறிவார்ந்த கேள்விகளை கேட்டு திணறடிக்கிறான். கபிலர் ரொம்ப ஃபெடப் ஆயிடுறாரு. இவன் கிட்ட நாம படிச்ச கல்வி அறிவு எல்லாமே தோத்து போயிடும் போல அப்படின்னு மனசுக்குள்ள நினைக்கிறாரு. நீலன் ஒரு இடத்துல கபிலர பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான்.
மரங்கள் கொம்புகள் இருக்கிறதால தான் கீழ்நோக்கி வளருது சொல்றான். இவன் கொப்புகளை தான் கொம்புனு சொல்றான் போல அப்படின்னு நெனச்சிட்டு ஆமாம் மரத்துக்கு நிறைய கொப்புகள் இருக்குது அப்படின்னு சொல்றாரு. அதுக்கு நீலன் சொல்றான் நான் கொப்புகள சொல்லல, கொம்புகள் இருக்குதுன்னு சொல்றேன் அப்படின்னு திரும்ப சொல்றான். கபிலர் குழம்பிடுறாரு மரத்துக்கு எப்படிப்பா கொம்பு இருக்கும் அப்படின்னு கேக்குறாரு. அப்ப அவன் சொல்றான் மரங்கள் கடினமான பாறைகளையும் மண்ணையும் தொலைச்சுக்கிட்டு அடியில வேரூன்றி போயிட்டே இருக்கும். அது அப்படி போறதுக்கு அதோட கொம்புகள் தான் அதுக்கு பயன்படுது. அதனால மரங்கள் எப்பொழுதும் மேல் நோக்கி வளரதில்லை கீழ்நோக்கி தான் வளருது அப்படின்னு சொல்றான். இவருக்கு ஒண்ணுமே பேச முடியல ஐயயோ இவன் நம்மள ஒரு வழி பண்ணாம விட மாட்டான் போல நம்மகிட்ட இவன் மாட்டல இவன்ட்ட தான் நாம மாட்டிருக்கோம் அப்படின்ற மாதிரி பீல் ஆயிடறாரு.

இவன எங்கேயாவது நாம லாக் பண்ணணுமே அப்படின்னு யோசிச்சுகிட்டே இருக்காரு. மறுபடியும் திருப்பி ஒரு கேள்வி கேட்கிறான் நீங்க வயல் நண்ட பார்த்திருக்கீங்களா அப்படின்னு கேட்கிறான். அப்படி கேட்டது ம்….பார்த்து இருக்கேன் அதோட கண்கள் கூட வேப்பம்பூ மாதிரி இருக்கும்னு கபிலர் சொல்றாரு. வேப்பம்பூவா அதான் பாண்டிய மன்னன் கழுத்துல மாலையா தொங்குதா அப்படின்னு கிண்டலா சொல்லி சிரிக்கிறான். கபிலருக்கு பயங்கர ஷாக் என்னடா அவ்வளவு பெரிய பேரரசர போய் அசால்டா கேவலமா பேசுறான். இது அறத்துக்கே இழுக்காச்சேனு ஒரு மாதிரி பீல் பண்ணிட்டு இவனை எப்படியாவது மடக்குனும்னு சொல்லி இவர் திருப்பி ஒரு கேள்வி கேட்கிறார். இந்த இடம் தான் நமக்கு Goosebumps ஆன இடம்.
சினிமால ஆக்சன் ஹீரோவோட கேரக்டர்ஸ்டேஷன பில்டப் பண்ண ஹீரோயிசமா ஒரு சீன் வைப்பாங்களா உதாரணத்துக்கு கே ஜி எஃப் படத்துல ஒரு டயலாக் இருக்கும் நான் பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா நான் அடிச்ச பத்து பேரும் டான்டா அப்படின்னு டயலாக் வரும்ல அது மாதிரி இந்த இடத்துல வேள்பாரியோட ஹீரோயிசத்துக்கான இடம் அப்படி ஒரு சீன் தான். இதுக்கு அப்புறம் கபிலருக்கும் நீலனுக்கும் இடையில் ஏற்படுற கான்வர்சேஷன்ல அந்த Goosebumps சீன் நடக்க போகுது .
கபிலர் நீலன மடக்குறதுக்காக நீ கடல் நண்ட பாத்திருக்கியானு கேட்பாரு. அதுக்கு பாத்ததில்ல அப்படின்னு சொல்லுவான். என்னப்பா வயல் நண்ட பத்தி தெரிஞ்சு வச்சிருக்க ஆனா கடன் நண்ட பாத்ததில்லன்னு சொல்ற. சரி சமுத்திரத்தையாவது பாத்திருக்கியா அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு சமுத்திரமா நான் அதை பார்த்ததில்லையே அப்படின்னு நீலன் சொல்றான். என்னப்பா இவ்வளவு பேச்சு பேசுற சமுத்திரத்தை பாக்கலன்ற நீயெல்லாம் வேஸ்ட்பா அப்படின்பாரு. இவனுக்கு ஒண்ணுமே புரியல என்னடா நம்மள இப்படி வேஸ்ட்னு சொல்றாரு அப்படின்னு யோசிக்கிறான்.
இவன் நம்ம கிட்ட வசமா மாட்டிகிட்டான் அப்படின்னு நினைச்சுட்டு கபிலர் தொடர்ந்து பேசுறாரு. அது எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா அப்படின்னுவாரு. இவன் அப்படியே ஆச்சரியமா அது எப்படி இருக்கும் அப்படின்னு கேட்பான். அது பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும் ரொம்ப பெருசா இருக்கும் அப்படின்னுவாரு. ரொம்ப பெருசா எவ்வளவு பெருசுனு கேட்பான். அத அளவிடவே முடியாது அப்படின்னுவாரு. ரெண்டு கையையும் விரிச்சு ரொம்ப பெருசு அப்படின்னு பெருமிதமா சொல்லுவார். அவன் கேட்டுக்கிட்டே மேலே ஏறி போயிட்டேருப்பான். டக்குனு கபிலரா திரும்பி பார்த்து என் பாரியின் கருணையை விடவா சமுத்திரம் பெருசு அப்படின்னு கேட்பான். அவ்வளவுதான் கபிலர் வாயடைச்சு போய் நின்னுடுவாரு. இவ்வளவு நேரம் அவன் கிட்ட பேசிட்டு வந்த எல்லா விஷயத்தையும் விட தூக்கி சாப்பிடற மாதிரி இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டானே இதுக்கு மேல அவன் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியாம அப்படியே மரத்துல சாஞ்சிருவாரு.
சமுத்திரத்தை விட பாரியின் கருணை மிகப் பெரியதுனு உதாரணமாக சொல்றப்ப நமக்கு பாரி மேல உயர்ந்த எண்ணம் ஏற்படுகிறது. இந்த இடம்தான் நமக்கு Goosebumps ஆன இடமா இருக்கும். இதுக்கப்புறம் வேள்பாரிய நாம பார்த்தே ஆகணும்டா அப்படின்னு ஒரு ஈர்ப்பு கபிலருக்கு உண்டாயிடும். அதுக்கப்புறம் நீலன் கூட வேகமா டிராவல் பண்ண ஆரம்பிச்சிடுவாரு நிறைய விஷயங்களை பத்தி அவருக்கு சொல்லிக்கிட்டே வருவான். அவர் ஒவ்வொரு இடத்திலும் அவன வியந்து பாத்துக்கிட்டே கூட பயணித்தபடியே வருவாரு. ஒரு சமதளமான இடத்துக்கு கிட்ட போய் ரெண்டு பேரும் ரீச் ஆவாங்க. அந்த இடத்துல இருந்து நீலன் கபிலருக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பிப்பான்.

அந்த கதை கபிலர் வாழ்ந்த காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த ஒரு காதல் கதை. அந்த காதல் கதை என்னன்னா தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் கடவுளாக வழிபடக்கூடிய முருகனுக்கும் வள்ளிக்கும் உண்டான ஒரு ஆகச்சிறந்த ஒரு காதல் கதை. அந்த காதல் கதையை அடுத்த எபிசோட்ல நான் உங்களுக்கு சொல்கிறேன். அப்படி ஒரு அற்புதமான ஒரு காதல் கதை அந்தக் கதையை படித்த பிறகு நீங்களும் உடனே காதலிக்க கிளம்பி விடுவீர்கள்.
மீண்டும் பயணிப்போம். . . ..
அன்பார்ந்த ஆகச்சிறந்த புத்தக வாசிப்பாளர்களான உங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய வேண்டுகோள் நான் எழுதும் இந்த படைப்புகளில் உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். படைப்புகள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்.
நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்
PRAKASH
August 9, 2025அருமையான தொடர் உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்
Chandran t
August 9, 2025Very interesting I expecting next episode,