வேள்பாரி….!வேற மாறி…..! Episode:3


நீலன், முருகனின் காதல் கதையை சொல்லப் போகிறேன் என்றதும் கபிலருக்கு உள்ளம் குதூகளித்தது.
தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஒரு அழகான காதல் கதையை படமாக எடுத்திருப்பார் கார்த்திக், ராதா அந்த படத்தில் அறிமுகம் ஆகி இருப்பார்கள். ஒரு இந்து பிராமணப் பையனுக்கும் ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கும் ஏற்படுகிற காதல். இதற்கு பொருத்தமான டைட்டில் எதுவாக வேண்டுமானாலும் வைக்கலாம் கதைக்கு ரிலேட்டடாக காதல், காதல் சாதி, காதல் அழிவதில்லை, காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், இப்படி காதல் சம்பந்தமான டைட்டில் ஏராளமானது வைக்கலாம். சாதி, மதம் சார்ந்த கதைக்களமாக இருக்க எதற்காக “அலைகள் ஓய்வதில்லை” என்று டைட்டில் வைத்தார் என்பது என்னால் ஊகிக்க முடிந்ததை உங்களிடம் பகிர்கிறேன்.
இந்த உலகம் தோன்றியபோது முதன் முதலில் தோன்றியது காதல் தான் என்று ஆதாம் ஏவாளை ஒரு குறியீடாக சொல்லுவார்கள். உலகம் காதலால் சூழப்பட்டது தான். கடல் இருக்கும் வரை அலைகள் எப்படி இருக்குமோ அதே போல் உலகம் இருக்கும் வரை காதல் இருக்கும். இந்த இரண்டும் நிலையானது, ஓயாது என்பதற்காகத்தான் “அலைகள் ஓய்வதில்லை” என்ற டைட்டில் வைத்திருப்பார் என்று நான் கருதுகிறேன்.

எவ்வியூரை ஆண்ட மன்னன் எவ்வியும், முருகனும் திக் ஃப்ரெண்ட்ஸ். எவ்வி முருகனை பார்த்து நீயோ வேட்டுவர்குலம் வள்ளியோ கொடிக்குலம் அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியை முன் வைக்கிறான். முருகன் காலத்தில் கூட சாதிய வேறுபாடுகள் இருந்திருக்கிறது என்றால் இப்போதுள்ள நிலைமையை யோசித்துப் பாருங்கள். நாம தான் ஹீரோவாச்சே அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை முதல்ல வள்ளிய கரெக்ட் பண்ணனும் அதுதான் டார்கெட் என்று எவ்விக்கு உணர்த்தினான் முருகன். சரி நண்பனாச்சே நண்பன் காதல் பண்ணா நம்ம சசிகுமார் மாதிரி கழுத்துல இருக்குற செயின் வரைக்கும் கழட்டி தந்துருவாங்க அதுதான் நட்போட இலக்கணம். சாதாரண நட்பே அப்படின்னா முருகன், எவ்வி நட்பு எப்படிப்பட்டதாக இருக்கும். முருகனுக்காக என்ன வேணாலும் செய்ய தயாராக இருந்தான் எவ்வி.
முருகன் மௌனராகம் கார்த்திக் மாதிரி வள்ளிய தொடர்ந்து பாலோ பண்ணி லவ்வுல வீழ்த்த ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பாரு. ஆனா வள்ளி ரேவதி மாதிரி ஜெகவாங்கிகிட்டே இருந்தாள். ஒரு கட்டத்துல எவ்வி நான் ஒரு ஐடியா சொல்றேன் என்று சந்தானம் லவ்வுக்கு ஐடியா சொல்ற மாதிரி ஒரு ஐடியாவை கொடுக்க, அத முருகன் ஃபாலோ பண்றாரு அதுக்கு முன்னாடி ரெண்டு பேத்துக்கும் முக்கியமான வேலை ஒன்னு இருக்கு அது என்னன்னா நெற்கதிர்கள் தானியங்களை பன்றி கூட்டம், யானை கூட்டம், பறவைகள் கூட்டம் அதுங்கட்டருந்து காப்பாற்றுவது தான் அவங்களோட மெயின் வேலை. ஏற்கனவே ஒருமுறை முருகன் பன்றியை விரட்டிட்டு போகும் போதுதான் ஒரு நீர்வீழ்ச்சியில வள்ளிய பாக்குறான். அன்றிலிருந்து வள்ளியின் மயக்கமாகவே இருந்தான் முருகன். எவ்வி முருகன் கிட்ட சீரியஸா நமக்கு முக்கியமான வேலை இருக்கு மறுபடியும் பயிர்களை பன்றி கூட்டம் யானை கூட்டம் சாப்ட்டு போயிடும் நாமதான் காவல் காக்கணும் அப்படின்னு எவ்வளவோ சொல்லி பாக்குறான். முருகன் எதையுமே காதில் வாங்குற மாதிரி தெரியல சரி நண்பனாச்சே அப்படின்னு முருகனுக்காக உயிரே கொடுக்கிறப்ப இது சாதாரண பயிர் தானே போனா போகட்டும் என்று முடிவுக்கு வந்தான் எவ்வி

முருகன் வள்ளிய பார்த்ததுக்கு அப்புறம் நிறைய முறை சந்தித்து காதல் வயப்பட வைக்கிறதுக்கு ரொம்ப ட்ரை பண்றான் ஆனா எதுவுமே ஒர்க்அவுட் ஆகல சரி நண்பன் இப்படி ரொம்ப லவ் பீலிங்ல கஷ்டப்படுறானேனு சொல்லி ஒரு ஐடியா கொடுக்கலாம்னு முடிவு பண்ணி ஒரு ஐடியா சொல்றான் எவ்வி. நான் சொல்ற இடத்துக்கு எப்படியாவது வள்ளிய கூட்டிட்டு போ அங்க மட்டும் வள்ளி உன் கூட வந்தா லவ் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆயிடும் என்று சொல்ல, சரி நண்பன் சொல்றானே அப்படின்னு எவ்வி சொன்ன இடத்துக்கு வள்ளிய கூட்டிட்டு போறான் முருகன். வள்ளி அந்த இடத்துக்கு வந்ததும் என்ன விஷயத்துக்காக வர சொன்னீங்கனு கேக்குறா. அந்த கேள்வில எந்த லவ் ஃபீலுமே இல்ல. ஏதோ கடமைக்கு கூட்டிட்டு வந்த மாதிரி ஃபீல் தான் இருக்குது. முருகனுக்கு என்னடா இந்த இடத்தில் கூட்டிட்டு வந்து பேசுனா லவ் ஒர்க்கவுட் ஆகும்னு எவ்வி சொன்னான். இப்ப வள்ளிகிட்ட எந்த லவ் ரியாக்க்ஷனுமே இல்லையே என்று முருகன் பீல் பண்ண ஆரம்பிச்சுட்டான்.
அந்த இடம் என்ன விசேஷமான இடம்னா ஃபுல்லா முல்லை கொடி படர்ந்து இருக்கிற ஒரு இடம். மாலை நேரம் வந்தா முல்லைலாம் மலர ஆரம்பிச்சுடும் அப்படி மலரப்ப அந்த இடம் ஃபுல்லா முல்லை மலரோட வாசனை சுகந்தமா வீசும். அப்படி காத்துல பரவுறப்ப வள்ளி லவ்வுல ஃபீல் ஆயிடுவா அப்படின்ற ஒரு ஏற்பாட்டுக்காக அந்த இடத்தை சூஸ் பண்ணி வர சொன்னான் எவ்வி. ஆனா அந்த முல்லை மலர் வாசத்துல வள்ளிக்கு எந்த ஃபீலிங்குமே வரல. சரி ஓகே இது பரவால்ல அடுத்த நாளு வேற ஒரு ஐடியா தரலாம்னு முருகன் கிட்ட எவ்வி சொல்ல . யப்பா உன் ஐடியாவே வேணாம் லவ் பண்றது நானு, அத நானே பாத்துக்கிறேன் அப்படின்னு சொல்லி கை எடுத்து கும்பிட்டாப்படி முருகன்.
சில பேரு சில இடத்துக்கு போனா நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும் அப்படின்னு ஒரு உருட்டு உருட்டுவாங்க. சயின்டிபிக்கா பார்த்தா அப்படி எந்த இடத்திலையும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்குறதுக்கான அறிகுறியே இருக்காது. சில பேரு மக்கள்ட்ட ஏதாவது ஒரு புதுசான விஷயத்தை சொல்லி அவங்க கிட்ட தான் ஒரு சிந்தனையாளன். தான் ஒரு அறிவாளி அப்படின்னு காமிக்கிறதுக்காகதான் இந்த மாதிரி புரியாத ஏதோ ஒன்னு சொல்லி கதை கட்டிக்கிட்டே இருப்பாங்க. அது மாதிரி இந்த முல்லை மலரும் ஒர்கவுட் ஆகல . இந்த முல்லை மலர்களாலாம் லவ் ஃபீல் கிரியேட் ஆனா நிறைய பேத்தை முல்லை மலர், மல்லி பூ வாங்கி கொடுத்தே கரெக்ட் பண்ணிடலாம். லவ் ஃபீல் என்பது இயற்கையா ரெண்டு பேருக்குள்ளாற உருவாக வேண்டிய ஒரு கெமிஸ்ட்ரி. அது இந்த மாதிரி காத்து அடிச்சா வந்துரும் நல்ல பெர்ஃப்யூம் வாசனை வந்தா வந்துரும் அப்படின்னு சொல்றது மகா உருட்டு. இத தெரிஞ்சோ தெரியாமலோ எவ்வி பண்ணிட்டாரு. சரி அந்த காலத்துல அவர் பண்ணிட்டாரு ஆனா இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்துல இந்த மாதிரி யாரும் உருட்னா அதாவது ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் சில இடத்துக்கு போன கிடைக்கும் உங்களை சுற்றி ஒரு ஆரா சுத்துது அப்புறம் இவங்களோட பழகினா நெகட்டிவா இருக்கும் இவங்களோட பழகினா பாசிட்டிவா இருக்குன்னு சொல்றது எல்லாமே ஒரு அபத்தமான ஒரு வாதம். அதை யாருமே ஃபாலோ பண்ணாதீங்க இது என்னோட தாழ்மையான கருத்து. சயின்டிஃபிக்கா இதுக்கான எந்த ப்ரூப்பும் இல்ல.
சரி நாமளே ட்ரை பண்ணுவோம் அப்படின்னு முருகன் வள்ளிய இன்னொரு முறை அழைச்சிட்டு போறான். வள்ளியும் சரி ஏற்கனவே ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாரு இந்த ட்ரிப் எங்க கூப்பிட்டு போறானேனு சொல்லி ஆர்வம் இல்லாம போறா வள்ளி. முருகன் கூட்டிட்டு போன இடம் இதே மாதிரி பாறைகள் நீர்வீழ்ச்சிகள் அதுக்கு பக்கத்துல ஒரு மரம் அந்த மரத்து கிட்ட போய் நின்னு வெயிட் பண்ணு அப்டினு சொல்லிட்டு போய்ட்டாரு வள்ளியும் அந்த மரத்துக்கிட்ட நின்னு வெயிட் பண்றாங்க அந்த மரத்துல பார்த்தா காயும் மொட்டுமா தான் இருக்குது மத்தபடி எந்தவித வித்தியாசமும் இல்லை. சரி இந்த இடத்துக்கிட்ட ஏன் நம்மள நிக்க சொல்லிட்டு போனான் அப்படின்னு தெரியாம அவ அப்படியே நின்னு வேடிக்கை பார்த்துகிட்டே இருக்கா. அந்த மரத்துல எறும்பு எல்லாம் வரிசையா போயிட்டே இருக்கு. அத பாக்க ரொம்ப அழகா இருக்குது. எறும்பு ஊரறதை பார்த்துட்டு அப்படியே தொட்டு பாக்குறா அந்த எறும்பெல்லாம் வேக வேகமா போகுது. அப்ப அந்த மரப்பட்டைல ஒரு சின்ன ஸ்மெல் வருது. அந்த மரப்பட்டைய நல்லா நுகர்ந்து பாக்குறா அதுல ஒரு நறுமணம் வீசுது. அந்த பட்டைய உரிச்சு பாக்குறா அதுல ஒன்னும் பெருசா இல்ல ஆனா அந்த மரத்துக்கும் அவளுக்கும் ஒரு ஈர்ப்பு ஆகுற மாதிரி ஒரு ஃபீல் அவளுக்கு கிரியேட் ஆகுது. ரொம்ப நேரம் நிக்கிறா. அதுக்கப்புறம் முருகன் வந்து சரி வா போலாம்னு சொல்ல சரி தோழிகள் எல்லாம் வெயிட் பண்றாங்க கிளம்பலாம் அப்படின்னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்புறா.
அடுத்த நாள் எவ்விட்ட முருகன் வள்ளிய நேத்து ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனேன். அங்க மறுபடியும் கூட்டிட்டு போகப் போறேன். நான் வர்றப்ப வள்ளியோட தான் வருவேன் அதனால நாம எப்பொழுதும் வயக்காட்டு பயிர்களை பாதுகாக்கறதுக்கு ஒரு பரண் அமைப்போம்ல அது மாதிரி ரெண்டு பேரும் தங்குறதுக்கு பரண அமைச்சு வையினு சொல்றான். எவ்விக்கு ஒரு டவுட்டு என்னடா இவ்ளோ கான்பிடண்டா சொல்லிட்டு போறானே? எப்படி கூட்டிட்டு வருவான்னு யோசிக்கிறான். சரி நண்பனாச்சே அவன் வர்றப்ப தங்குறதுக்கு நாம அழகா ஒரு பரணை ரெடி பண்ணுவோம்னு சந்தன மரங்கள், வாசனை திரவியங்கள் கொண்ட நல்ல மரங்கள்லாம் வெட்டி ஒரு அழகான பரண் அமைக்கிறான்.
வள்ளி தோழிகளோட காட்டுப்பகுதிக்கு வர்றா. அப்ப முருகன் அவள பார்த்து என்கூட வர முடியுமான்னு கேக்குறான். என்னடா இவனுக்கு இதே வேலையா போச்சு கூட்டு போறான் எங்கையாவது நிப்பாட்டுறான் அதுக்கு அப்புறம் திருப்பி கூட்டிட்டு வந்துடறான் அப்படின்னு சொல்லி வேண்டாம் தோழிகள் எல்லாம் தப்பா எடுத்துப்பாங்க நான் கிளம்பனும் சொல்ல, இந்த ஒரு முறை மட்டும் நீ வா அதுக்கப்புறம் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லி ரொம்ப கம்பல் பண்ணி கூட்டிட்டு போறான். அவளும் சரி வேற வழி இல்லன்னு சொல்லிட்டு கிளம்பி முருகனோட போறா. அதே நீர்வீழ்ச்சி, பாறைகள் எல்லாம் தாண்டி அதே மரத்திடம் கொண்டு போய் நிப்பாட்டுறான். மறுபடியும் இதே மரத்துகிட்டயா அப்படின்னு சொல்லி இவ பீல் பண்ணிட்டு இருக்கிறப்ப முருகன் சொல்றான் அப்படியே கொஞ்சம் அண்ணாந்து பாருனு சொல்றான்.

அண்ணாந்து பாக்கிறா மரம் ஃபுல்லா மஞ்சளும் ப்ளூமா கலந்த ஒரு மிக்ஸடான கலர்ல பூவா பூத்திருக்கு. அதை பார்த்த உடனே மிரண்டுறா. ப்பா இவ்வளவு அழகா இருக்கு. நேத்துதான் பார்த்தோம் இந்த மரத்துல வெறும் காயும் மொட்டுமா தான் இருந்துச்சு ஆனா இன்னைக்கு பாத்தா கலர்ஃபுல்லா பூவா பூத்திருக்கு அப்படின்னு அவளுக்குள்ள பயங்கரமான பீலிங். வள்ளி முருகன பாத்து கேக்குறா எப்படி நேத்து பூவே இல்லாம இருந்தது. இன்னைக்கு மரம் ஃபுல்லா பூவா பூத்துருக்கு காரணம் என்ன அப்படின்னு முருகன்ட்ட கேக்குறா. அப்போ முருகன் சொல்றான் இந்த மரத்துக்கு “ஏழிலைப்பாலைனு” பேரு இது இந்த காட்டிலேயே ஒரு பேரதிசயமான மரம் இது பல வருடமா பெண்களோட பரிசத்துக்காக காத்திருக்கும். நீ நேத்து அந்த மரத்தை தொட்டப்ப உன்னோட பரிசம் பட்டதால இந்த மரம் எப்படி பெண்கள் பூப்பெய்துவாங்கலோ அது மாதிரி இந்த மரம் பூப்பெய்தி விட்டது அதனாலதான் அது பூவா பூத்திருக்கு அப்படின்னு சொன்னதும் அவளுக்குள்ளே சிலிர்ப்பு ஏற்பட்டது. அவ அப்படியே தன்னையே மறந்துடறா. அவளுக்குள்ளாற இருக்குற காதல் ஹார்மோன்ஸ் பயங்கரமா சுரக்க ஆரம்பிக்குது. அவ்ளோ அற்புதமா ஆனந்தமா என்ஜாய் பண்றா.
அப்படியே அந்த மரத்தை போய் கட்டி அணைக்கிறா. கட்டி அணைச்சு முத்தம்மா கொடுக்குறா. அந்த மரத்தை விட்டு அவளால வெளியே வர முடியாத அளவுக்கு ஒரு இருக்கமான மனநிலைக்கு போயிட்டா. இப்ப அப்படியே கைய விலக்கி பாக்குறா முருகன் எதிரே நிக்கிறான். மரத்தை எப்படி கட்டி அணைத்தாலோ அதே மாதிரி முருகனை இறுக்கி கட்டி அணைக்கிறாள். காதல் இரண்டு பேருக்குள்ள அபரிவிதமா மலருது. மரத்துல கட்டி அணைத்த வலிமையை காட்டிலும் முருகனை அதிக வலிமையோடு கட்டி அணைக்கிறாள். உஷ்ணம் சூடேறுது உடலுக்குள். உதடுகள் இரண்டு பேருக்கும் துள்ளி விளையாடுகின்றன. வள்ளியின் கழுத்தில் விழுந்த வியர்வை மார்புக்குள் ஊடுருவி கீழே இறங்காதபடி அப்படியே தடைப்பட்டு நிக்கிது. இருவருக்கும் இடைவெளி கொஞ்சம் கூட இல்லாதபடி அப்படி ஒரு நெருக்கம். அந்த ஏழிலை பாலை மரம் சூடேறி இருவர் மீதும் பூக்களை அள்ளி தூவுது. இந்த காதல் கதையை நீலன் சொல்லி முடிக்கிறப்ப கபிலர் அப்படியே மெய் மறந்து உருகி நிக்கிறார்.
வேறு வேறு குலத்தில் காதலித்த இருவர் ஓடிப்போனால் சொந்த சாதியினர் இப்போது எப்படி ஊர் ஊராக சென்று தேடி பழி தீர்ப்பார்களோ அல்லது பிரித்து விடுவார்களோ அதுபோல வள்ளி, முருகனின் காதலை பிரிக்க காட்டுக்குள் வலை வீசி தேடத் தொடங்குகிறார்கள் வள்ளியின் கொடிக்குலத்தினர். அந்த கொடிக்குலத்தினரிடமிருந்து முருகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.
மீண்டும் பயணிப்போம்….
– ஃப்ரெடி டிக்ரூஸ்-
Chandran t
August 26, 2025how can it’s possible? different types of subjects
only can do you only,