இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி ! வேற மாறி! வரலாற்றுத் தொடர் – பகுதி. 4

தலைவனும், தலைவியும் நடத்தும் ஆதி கூத்த பத்தி உங்களுக்கு தெரியுமா? அதாவது விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிச்ச தலைவன் தலைவி சினிமாவில் வர ரீல் கூத்து இல்லைங்க. இது ரியல் கூத்து. முருகனும் வள்ளியும் காதலில் திளைத்து சங்கமித்த ரியல் கூத்தை தான் எவ்வி தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதி கூத்து என்று வர்ணிக்கிறான். தலைவன் தலைவி படத்தில டைட்டில் கார்டு போடுவாங்க அப்ப  மதுரையில ஒரு மலைய காட்டுவாங்க. அந்த மலைய நீங்க பஸ்ல, கார்ல போறப்ப ரோட்ல இருந்தே பாக்கலாம். அந்த மலை ஒரு யானை படுத்திருக்கிற மாதிரி இருக்கும். அது பெரிய பாறையா இருக்கும். மதுரைக்கு அந்த வழியா போறவங்க கண்டிப்பா அந்தப் பாறைய பார்த்திருப்பாங்க அவ்வளவு பிரம்மாண்டமா அழகா இருக்கும்.

பச்சைமலையின் தென் திசையில் யானை பள்ளம்னு ஒரு எடம் இருக்கு. அந்த எடத்துல மிகப்பெரிய வேங்கை மரம் ஒன்னு இருக்கும். அந்த மரத்தோட அடிவாரத்தில பசுமையான மலைகள் காலடியில் பணிந்து கெடக்கிற மாதிரி காட்சியளிக்கும். அப்டி ஒரு விசாலமான மரம். அந்த மரத்துல தான் முருகனும் வள்ளியும் தங்கள் காதலை  வளர்த்தெடுக்க வசதியான ஒரு பரணை கட்றதுக்கு ரெடி ஆகிறான் எவ்வி. வாசனைக்கு பேர் போன சந்தன மரங்களை அடுக்கி அத சிலாக் கொடிய வச்சு கட்டுறான். சிலாக் கொடின்றது கொடியிலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான கொடி. அதுல ஒரு ஸ்பெஷல் என்னன்னா அந்த கொடிய வெட்டுனா அதுல அற்புதமான ஒரு ஸ்மெல் வரும். அத முகர்ந்து பார்த்தாலே புத்துணர்ச்சியா இருக்கும். கொடிய வெட்டுன பிறகும்  நாலு நாள் வரைக்கும் காஞ்சி போகாம பசுமையா இருக்கும். அந்த கொடிலருந்து பால் வடிஞ்சிக்கிட்டே  இருக்கும். அதே மாதிரி சந்தன மரம். சந்தன மரத்த பத்தி நம்ம எல்லாத்துக்கும் தெரியும். அது இன்னைக்கும் மக்களுக்கு பயன்பாட்டில இருந்துகிட்டே தான் இருக்கு. அதனால அத பத்தி நான் டீடைலா சொல்லல.

அவ்ளோ உயரத்துல இருக்கிற வேங்கை மரத்துல வாசனையான சந்தன மரத்தையும் அதை கட்றதுக்கு நறுமணம் தர்ற சிலா கொடியையும் சேர்த்து ஒரு பரண் அமைக்கிறான். அந்த பரணுக்கு முன்னாடி இப்ப இருக்குற இலவம் பஞ்சு மெத்தையானாலும் சரி லேட்டஸ்ட் ஜெர்மன் டெக்னாலஜியில வந்த எம்மா ஃபோம் பெட்டானாலும் சரி கிட்டவே நிக்க முடியாது. அப்படி ஒரு சிறப்பான பரணை  கட்டி முடிக்கிறான்.  அந்த பரண்ல முருகனும் வள்ளியும் நடத்தும் கூத்துதான் ஆதிக் கூத்து. அத இப்ப நெனைச்சாலும் எம் மக்களுக்கு இன்பமூட்டும் நினைவா தான் இருக்கும்னு பூரிச்சி போறான் எவ்வி.

முருகனையும், வள்ளியையும் அந்த இடத்துக்கு இரவுல கூட்டிட்டு வரான்.  காடு முழுக்க கும்மிருட்டு. முருகனும் வள்ளியும் எவ்வி பின்னாடியே  பேசி சிரிச்சுக்கிட்டே  ஃபாலோ பண்ணி வராங்க. ரெண்டு பேருக்கும் முன்னாடி பக்கமா தான் நடந்து போறான். ஆனா லவ்வர்ஸ் ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு அவன் காதுக்கு கொஞ்சம் கூட கேக்கல. அப்படி ஒரு சன்னமான குரல்ல காத்துலயே பேசிகிட்டு வராங்க. லவ்வர்ஸ் அப்படித்தானே பேசிக்குவாங்க. நீங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கேட்டாலும் உங்களுக்கு ஒண்ணுமே கேக்காது. அவங்களுக்கு மட்டும் தான் கேட்கும். மெரினா பீச், பார்க் பக்கம் போயிருந்தா கண்டிப்பா ஒங்களுக்கு  தெரிஞ்சிருக்கும். 
ரெண்டு பேரையும் பரண்ல செட்டில் பண்ணிட்டு தன்னுடைய குடிலுக்கு  கிளம்பும்போது முருகன் எவ்விக்கு ஒரு பொருளை பரிசா தர்றான். அதை வாங்கிட்டு குடிலுக்கு மகிழ்ச்சியோடு கிளம்பி போறான். முருகனும் வள்ளியும்  பரண்ல தங்களின் காதலில் திளைக்க  ஆரம்பிக்கிறாங்க. பல நாட்கள் உருண்டோடுது.

ஒரு நாள் எவ்வியும், முது கிழவனும் குடிலுக்கு முன்னாடி பேசிகிட்டு இருக்காங்க. கொஞ்சம் தூரத்துல திமு திமுனு ஒரு கூட்டம் வெட்டருவால் வேல் கம்போட போயிட்டு இருக்காங்க. அதை எவ்வி பாக்குறான். யார்ரா இவ்ளோ படையோடு போயிட்டு இருக்குறதுனு  யோசிக்கிறான். சரி அவங்க கிட்ட போய் கேக்கலாம்னு முடிவு பண்ணி நீங்க யாரு எதுக்காக இப்படி கூட்டம் கூட்டமா வெட்டருவால், வேல் கம்போட போயிட்டு இருக்கீங்கன்னு கேக்குறான். அதுக்கு அந்த கூட்டத்தில் தலைவனான ஒருத்தன் நாங்க எங்க குலமகள் வள்ளியை காணோம்னு தேடி போயிட்டு இருக்கோம்னு சொல்றான். இந்த குலமகள்னா என்னன்னு உங்களுக்கு புரியுதா அதாவது எங்க சாதிக்கார பொண்ணு அப்புடின்னு அர்த்தம். அதத்தான் அந்த காலத்தில குலமகள்னு சொல்றாங்க.

இப்பலாம் எங்க சாதிக்கார  பொண்ண எவனோ ஒருத்தன் தூக்கிட்டு போயிட்டான் அவன உடக்கூடாது அப்படின்னு சொல்லி சில பேர் கோபமா பேசிட்டு இருக்காங்கள்ல அது மாதிரி தான். வள்ளியை காணோம்னு கொடி குலத்தில இருக்கிறவங்க வெட்டருவால் வேல் கம்போட காட்டையே வலை போட்டு தேடிட்டு இருக்காங்க. ஒரு சில பேர கீழ்த்திசை வழியா அனுப்பி இருக்கோம். இன்னொரு குரூப்ப யானை பள்ளத்துக்கு அனுப்பி இருக்கோம்ன்னு சொல்ல, அடடா நாம செமையா மாட்டுணோம் யானை பள்ளத்துல தான் நம்ம தலைவன் வள்ளியோட  இருப்பான் இவனுங்க கைல சிக்கனா பெரிய பிரச்சனை ஆயிடும் போல அப்படின்னு கவலைப்படறான் எவ்வி. ஒரு நிமிஷம் யோசிச்சவன் அவங்க கிட்ட இங்கேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் எங்களோட ஆட்களையும் கூட்டிட்டு வரேன் அதுக்கப்புறம் மொத்தமா போய் எல்லாரும் சேந்து போய் தேடலாம்னு சொல்றான். அவங்களுக்கும் அட பரவாயில்லையே நமக்கு சப்போர்ட்டா யாருன்னு தெரியாத ஒருத்தர் கூட ஹெல்ப் பண்ண வரேன்னு சொல்றாரேனு அவங்களுக்கு சந்தோசமாயிடுச்சு. சரி நாங்க வெயிட் பண்றோம் நீங்க போய் உங்க ஆளுங்களெல்லாம் கூட்டிட்டு வாங்கனு சொல்லி அனுப்பி வெக்கிறாங்க.

எவ்வி குடிசைக்கு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன மட்டும் கூட்டிட்டு வரான். அவன் தலையில ஒரு மண் கலசம் இருக்கு. எல்லாரும் என்னடா ஆள கூட்டிட்டு வர்றேன்னு போனான் இப்ப ஒரே ஒருத்தனை மட்டும்  மண் கலசத்தோட கூட்டிட்டு வந்துட்டுருக்கான் இதான் இவனுங்களோட ஹெல்பானு கோபம் ஆயிடறாங்க. அவன் கூட இருந்த முதுகிழவனும்  இவன் என்ன பண்றான்னு ஒண்ணுமே புரியலையே ஆள கூட்டிட்டு வரேன்னு தானே போனான் ஒருத்தன மட்டும் எதுக்கு கூட்டிட்டு வரான் என்று அவரும் குழம்பி நிக்கிறாரு. எவ்வி  அவங்க கிட்ட  நீங்க எல்லாம் பொண்ண தேடி டயர்டா இருப்பீங்க அதனால உங்களுக்கு பழச்சாறு  கொண்டு வந்துருக்கேன் அதை குடிச்சிட்டு  தெம்பா தேடலாம்னு சொன்னதும். எல்லாரும்  அடடா பரவாயில்லையே நல்ல மனுசனா இருக்காரே என்று உற்சாகமாயிடுறாங்க.

அந்த பழச்சாறை வாங்கி எல்லாரும் மடக்கு மடக்குனு  குடிக்கிறாங்க.  மண் பானையில் கலசத்துல ஃபுல்லா தண்ணிர  நிரப்பி அதுல ஒரு பூண்டு பல்ல போடறான் எவ்வி. அந்த பூண்டு தான் எவ்விக்கு முருகன் பரிசா கொடுத்த பொருள். அந்த பூண்டை தண்ணீரில் கலந்தா அது சோம பானமா மாறுது. அந்த பூண்டு தண்ணிய எடுத்து ஒவ்வொருத்தருக்கா ஒரு குடுவையில கொடுக்க, வாங்கி குடிக்கிறவங்க தொண்டையில இறங்குற பூண்டு பாணம் அவ்வளவு ருசியா இருக்குது. அவங்களுக்கு ஆவல் அடங்கல இன்னொரு டம்ளர் வேணும்னு வாங்கி வாங்கி குடிக்கிறாங்க. குடிச்சு முடிச்ச பிறகு அப்படியே ஒரு வித இன்பமான ஒரு கிறக்கம் அவங்களுக்கு ஏற்படுது. ஆஹா என்னடா இந்த பானம் அப்படியே ஆளையே மயக்குது  நம்மள இன்னும் குடிக்கணும் குடிக்கணும்னு தூண்டுதே அப்படின்னு சொல்லி இன்னொரு குவள இன்னொரு குவளனு வாங்கி வாங்கி குடிக்கிறாங்க. எவ்வியும் குடிச்சுக்கிட்டு முதுகிழவனுக்கும்  குடுக்குறான். அந்த கூட்டமே  குடிச்சி முடிக்க மண் கலையம்  காலி ஆயிடுது. அவங்க என்னங்க காலி ஆயிடுச்சு. இதெல்லாம் பத்தவே பத்தாது இன்னும் வேணும்னு கேட்க, முது கிழவன் என்னடா பொண்ண தூக்குனவனா எங்க இருந்தாலும் தூக்குவோம்னு வேல் கம்போட வீர வசனம் பேசிட்டு வந்தானுங்க இப்ப பூண்டு பாணத்த குடிச்சிட்டு மல்லாக்கா கிடக்குறானுங்க. இதுல குலத்த காக்குறேன்னு  பில்டப் வேற அப்படின்னு மனசுக்குள்ள  நெனைச்சுக்கிட்டாரு.

அந்த பூண்டு பானத்திலருந்து  ஒரு சில துளிகள் தரையில புல்லுல சிந்துது. சிந்துன சில துளிகளோட  வாசனைய மோப்பம் புடிச்சிக்கிட்டு  பாம்பெல்லாம் பல இடங்கள்ல இருந்து அந்த எடத்துக்கு படையெடுத்து வந்திருச்சி. ஆஹா பாம்பா  வந்து நிக்குதேனு எல்லாரும் பயந்து பம்மி நிக்க. பாம்புங்கெல்லாம் புல்லுல சிந்துன பூண்டு பானத்தை போட்டி போட்டு நக்கி எடுக்குது.  அந்த பாம்புங்க நாக்கை ஃபுல்லா நீட்டி நீட்டி நக்க நக்க அந்த புள்ளோட அறுவை பாம்போட நாக்க   ரெண்டா பொளக்குது. அப்பயும்  அந்த பாம்புங்க விடல. உள்நாக்கு வரைக்கும் வெளியே நீட்டி நக்கி எடுக்க உள்ளார வரை அப்படியே ரெண்டா பொளந்துக்குது. அந்த அளவுக்கு அந்த சோம பானத்தை அந்த பாம்புங்க நக்கி நக்கி சாப்பிடுதுங்க. அதிலிருந்து தான் இந்த புல்லுக்கு நாக்கரத்தான் புல் அப்படின்னு பேர் வந்தது. என்று ஆசிரியர் நமக்கு சொல்றாரு.

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் இப்படி சோமபானத்த குடிச்சு குடிச்சு அந்த இடத்திலேயே எல்லாரும் கெடையா  கெடக்கிறானுங்க. பல நாள் ஆயிடுச்சு சரி இவனுங்க இனிமே வள்ளிய  தேடமாட்டானுங்கனு  நினைச்சுட்டு இருக்கப்ப, பலமான சுகமான காத்து வீசுது. அந்த காத்து  கீழ் திசையிலிருந்து யானை பள்ளத்தின் வழியா வருது. இந்த காத்துக்கு எப்படி இந்த சைடுல திரும்பி வருதுனு எவ்வி யோசிக்கிறான். ஒரு வேள வேங்கை மரம் தான் அந்த காத்த இந்த பக்கமா திருப்பி அனுப்பி இருக்குமோ என்று  பீல் பண்றான். ஆஹா அப்ப வேங்கை மரத்துல இவ்வளவு  வேகமான காத்து  அடிச்சா அந்த மரம் அசஞ்சி சேதாரம் ஏதாவது ஆயிருக்குமே. அதுல முருகனும் வள்ளியும் இருப்பாங்களே அவங்களுக்கு ஏதாவது ஆயிருக்குமோ அப்படின்னு  பதட்டமாயிடுறான். கொஞ்சமும் யோசிக்கல வேகமாக  வேங்கை மரத்த நோக்கி ஓடுறான்.

அங்க போய் பார்க்கிறான் மரத்தில சிலாக் கொடி அவிழ்ந்து கெடக்குது. சந்தன மர கட்டைகள் எல்லாம் அப்படியே பெரண்டு கெடக்குது. அந்த பரண்ல வள்ளியையும் முருகனையும் காணோம். அவர்கள் ரெண்டு பேருமே காதலை திளைத்து அப்படியே காணாம போயிட்டாங்க,  மறைஞ்சு போயிட்டாங்க அப்படின்னு பீல் பண்றான். வேங்கை மரமும் சிலாக் கொடியும் கால காலமா எப்படி இருக்குமோ அதே மாதிரி முருகனும் வள்ளியும் காதலும் காலகாலத்துக்கு நிலைச்சி  நிக்கும்னு நம்பிக்கையோட   சந்தோஷப்பட்டுக் கொண்டே அந்த இடத்திலிருந்து  நகர்ந்து தன்னோட குடிலுக்கு கிளம்பி போறான்.

முருகனுக்குப்  பிறகு எவ்வி குலத் தலைவனாக பொறுப்பேற்க்கிறான். முருகனுக்கு பிறகு நாற்பத்தி ரெண்டாவது தலைவனாக வேள்பாரி எங்கள் குலத் தலைவனாக இருக்கிறான் என்று  நீலன் முருகனின் காதல் கதையை  கபிலருக்கு சொல்லி முடிக்கிறான்.  வேள் பாரியை கபிலர் சந்திக்கும்  அந்த அற்புதமான நிகழ்வை நாம் அடுத்த தொடரில் பார்ப்போம்.

மீண்டும் பயணிப்போம்.

அன்பார்ந்த ஆகச்சிறந்த புத்தக  வாசிப்பாளர்களான உங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு  சிறிய வேண்டுகோள் நான் எழுதும் இந்த படைப்புகளில் உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். படைப்புகள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்.

நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

1 Comment

  1. Chandran t

    September 3, 2025

    Neenga oruvare yella subjects eluthiringale great,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி…! வேறமாறி…!

ஒரு வரலாற்று நாவலின் கதை…… வரலாற்று நாவல் – மதுரை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற வேள்பாரி
இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி….!வேற மாறி…..! Episode:2

வரலாற்று நாவலின் கதை இந்த எபிசோடிலிருந்து வாசகர்களாகிய உங்களிடம் நேரில் உரையாடுவது போல இந்த கதையை சொல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது அதன்படி